உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/12/2012

| |

டெல்லி முதல்-மந்திரி ஷீலாதீட்சித் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

புதுடெல்லி: டெல்லி முதல்-மந்திரி ஷீலாதீட்சித் டெல்லி மாநில பாரதீய ஜனதா தலைவர் விஜேந்தர் குப்தா மீது ஒரு அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் டெல்லியில் கடந்த மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது தன்னைப்பற்றி அவதூறாக பேசியதாகவும் தகாத வார்த்தைகளை உபயோகித்ததாகவும் ஷீலா தீட்சித் கூறியிருந்தார்.

மனுவை தாக்கல் செய்து அவரது வக்கீல் வாதாடுகையில் பாரதீய ஜனதா தலைவரின் பேச்சு தனிப்பட்ட முறையில் அல்லாமல் அரசாங்கத்தையே அவதூறு பரப்பியது போல் உள்ளது என்றார்.

இந்த வழக்கில் ஷீலா தீட்சித்தும் விஜேந்தர்சிங்கும் கோர்ட்டுக்கு வெளியே சமாதானமாக போகும் திட்டம் எதுவும் இல்லை என்று அவர்களது வக்கீல்கள் கோர்ட்டில் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது முதல்-மந்திரி ஷீலாதீட்சித் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.