உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/09/2012

| |

ஆஷா போஸ்லே மகள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!


பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மகள் வர்ஷா போஸ்லே சுப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தி திரையுலகில் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே. இவரது மகள் வர்ஷா போஸ்‌லே(56)., மும்பையில், பெதார் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயாருடன் வசித்து வந்தார். ஆஷா போஸ்லே மராத்தி கலாச்சார விருது விழாவில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்து வந்த வர்ஷா, தான் உரிமம் பெற்று வைத்திருந்த கைத்துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வர்ஷாவின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. போலீசார் வர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அம்மாவை போல வர்ஷாவும் இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் பின்னணி பாடகியாக இருந்துள்ளார். மேலும் சில மீடியாக்களில் சினிமா விமர்சராகவும் இருந்துள்ளார். விளையாட்டு விமர்சகர் ஹேமந்த் கென்கரே என்பவரை திருமணம் செய்து பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர் வர்ஷா. ஏற்கனவே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வர்ஷா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்ஷாவின் தற்கொலை குறித்து ஆ‌ஷா போஸ்லேவுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விஷயம் அறிந்து அவர் சிங்கப்பூரில் இருந்து இந்தியா திரும்ப விரைந்துள்ளார்