உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/11/2012

| |

பெண் குழந்தைகள் உரிமை குறித்து பான் கிமூனின் வேண்டுகோள்

அக்டோபர் 10ஆம் நாள், 21வது உலக உளநல நாளாகும். ஒவ்வொருவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, மனச்சோர்வுக்குள்ளாவோருக்கு உதவி செய்து, சமூகப் பாகுபாடு உள்ளிட்ட மனச்சோர்வுக்கு எதிரான தடைகளை நீக்க வேண்டும் என்று ஐ.நா தலைமைச் செயலாளர் பான் கிமூன் அன்று வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இவ்வாண்டு அக்டோபர் 11ஆம் நாள், முதலாவது சர்வதேச பெண் குழந்தைகள் நாளாகும். 10ஆம் நாள் பான் கிமூன் இது தொடர்பாக பேசுகையில், பெண் குழந்தைகளுக்கு வசதிகள் வழங்கி, குழந்தை திருமணப் பிரச்சினையில் கவனம் செலுத்தி, பெண் குழந்தைக்கான கல்வியைப் பரவலாக்கி, அவர்களது உரிமைக்கான வளர்ச்சியைத் தூண்ட சர்வதேச சமூகம் பாடுபட வேண்டும் என்றார் அவர்.
ஐ.நா பொது பேரவை 2011ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் நாள் ஏற்றுக்கொண்ட ஒரு தீர்மானத்தில், ஆண்டுதோறும் அக்டோபர் 11ஆம் நாளை, சர்வதேச பெண் குழந்தைகள் நாளாகக் கடைப்பிடிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.