உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/05/2012

| |

அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலின் முதல் விவாதம்


அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமா, குடியரசு கட்சியைச் சேர்ந்த அரசுத் தலைவர் வேட்பாளர் மிட் ராம்னேயுடன் அக்டோபர் 3ஆம் நாளிரவு கொலராடோ மாநிலத்தின் டென்வர் நகரத்தைச் சேர்ந்த டென்வர் பல்கலைக்கழகத்தில், இவ்வாண்டு அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலின் முதல் விவாதத்தை நடத்தினார். அவர்கள் வேலை வாய்ப்பு, வரி வருமானம் முதலிய பொருளாதாரப் பிரச்சினைகளைக் குறித்து, தீவிரமாக விவாதம் நடத்தினர்.
பராக் ஒபாமா ஆட்சிக்கு வந்த சுமார் 4 ஆண்டுகளில், நாட்டுப் பொருளாதாரம் நல்ல சாதனைகளைப் பெறவில்லை என்று மிட் ராம்னே தொடர்ந்து குற்றஞ்சாட்டினார். அத்துடன், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக, பாரம்பரிய எரியாற்றல் தொழிற்துறையை வளர்ப்பது, மக்களின் தொழில் நுட்பப் பயிற்சிகளை வலுப்படுத்துவது, புதிய சர்வதேச வர்த்தக உடன்படிக்கையைக் கைச்சாத்திடுவது, கூட்டாட்சி அரசின் நிதி பற்றக்குறையைக் குறைப்பது, வரிவிகிதத்தைக் குறைத்து, தொழிற்துறை மற்றும் வணிகத் துறையை வளர்ப்பது ஆகிய 5 திட்டங்களை அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.
பராக் ஒபாமா தன் சாதனைகளை நியாயப்படுத்திப் பேசினார். அமெரிக்கப் பொருளாதாரம் மறு மளர்ச்சி அடைய தொடங்கியது என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்க வாக்காளர்கள் இவ்வாய்ப்பு மூலம், இவ்விருவரின் கோட்பாடுகளை ஆழமாக அறிந்து கொள்வார்கள்.