உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/05/2012

| |

நியூசிலாந்து செல்ல மைக் டைசனுக்கு தடை

பிரபல உலக குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இங்கிலாந்துக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 1992ஆம் ஆண்டு கற்பழிப்பு வழக்கொன்றில் சிக்கிக்கொண்ட மைக் டைசன், அமெரிக்காவில் 6 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். இதனால் குத்துச்சண்டைக் கழகம் அவரை தற்காலிகமாக நீக்கியது. 
 
தற்போது விடுதலையாகியுள்ள அவர், நியூசிலாந்தில் ஒரு அறக்கட்டளை சார்பில் நடைபெறும் விழாவொன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார். 

ஆனால் அவரை நியூசிலாந்துக்குள் செல்ல விசா கொடுக்க முடியாது என்று அந்நாட்டின் குடியுரிமை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
 
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், “மைக் டைசன் நியூசிலாந்துக்குள் நுழைந்தால் அவரை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும். அதனால் அவர் நியூசிலாந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.