Election 2018

10/18/2012

| |

கொக்கட்டிச் சோலை இராமகிருஸ்ண மிஸன் பாடசாலையின் பவள விழா

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலே மிகவும் முக்கியமானதும் பழமை வாய்ந்ததுமான கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ண மிஸன் வித்தியாலயத்தின் பவள விழாவும் வருடார்ந்த பரிசளிப்பு விழாவும் வித்தியாலயத்தின் அதிபர் திருமதி யோகராணி ஞானப்பிரகாசம் தலைமையில் இன்று இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார். மேலும் வலயக் கல்வி பணிப்பாளர் பாஸ்கரன், உதவிக்கல்விப் பணிப்பாளர், சகோதரப் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பழைய மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில்களை முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் வழங்கி கௌரவித்தார். அத்துடன் பவள விழாவை முன்னிட்டு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.
சிரேஸ்ட பழைய மாணவர்கள் இந்த நிகழ்விலே கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.