உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/05/2012

| |

மதுபானசாலை திறப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்


video

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக மதுபானசாலை திறப்பதை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இப்பிரதேசத்தில் ஏற்கனவே 06 மதுபானசாலைகள் காணப்படுவதால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இப்பகுதி ஏழைகள் நாளாந்தம் மதுவுக்கு அடிமையாகி பல்வேறு சமூக பொருளாதார காலாசார சீரழிவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.மன்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜாவிடம்  புதிய மதுபானசாலை திறப்பதை தடை செய்யுமாறு கோரி மகஜர்களை பொது அமைப்புக்கள் கையளித்தன.
 
முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக இருந்த போது புதிதாக எந்த ஒரு மதுபானசாலைகளுக்கும் அனுமதி வழங்க கூடாது என்று கடுமையான போக்கினை கடைப்பிடித்து வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.