Election 2018

10/06/2012

| |

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்களுக்கு அகதி விஸா வழங்கலாம்: ஆஸி நீதிமன்றம் தீர்ப்பு

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் அகதி விஸா வழங்க முடியும் என்று அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. 

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு அந்நாட்டில் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 50 பேருக்கு இந்த தீர்ப்பின் விளைவுகள் முக்கியமாக அமையும். 

இந்த தீர்ப்புக்கு அமைய இவர்கள், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் ஆகையால் இவர்களை, சொந்த நாட்டுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ அனுப்ப முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

எம் 47 என அடையாளப்படுத்தப்படும் இலங்கையர் ஒருவருக்கு பாதுகாப்பு விஸா வழங்க மறுக்கும் தீர்மானம் சட்டத்துக்கு விரோதமானது என அவுஸ்திரேலிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஏ.ஏ.பி)