உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/10/2012

| |

மத்திய கிழக்கு நாடுகளின் அச்சுறுத்தலை சமாளிப்பதில் ஒபாமா தோல்வி: மிட் ரோம்னி



மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதில் அதிபர் ஒபாமா தோல்வியடைந்து விட்டார் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில்


போட்டியிடும் மிட் ரோம்னி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வெர்ஜீனியா மாகாணத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் மிட் ரோம்னி பேசியதாவது:

ஒபாமாவிடம் தலைமைப் பண்பு இல்லை. இதனால், அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்றபோது இருந்ததைவிட இப்போது நம் நாட்டுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. துரதிருஷ்டவசமாக, அதிபரின் வெளியுறவுக் கொள்கைகள் சிறந்த உலகத் தலைவர்கள் கொண்டிருந்த கொள்கைகளுக்குச் சமமாக இல்லை. மத்தியக் கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதில் ஒபாமா தோல்வியடைந்து விட்டார். "போர் மேகங்கள் தணிந்து வருகின்றன' என்று கூறிக் கொள்வதில்தான் அவர் விருப்பம் கொண்டிருந்தார். மற்றவர்களைப் போலவே நானும் அவர் கூறுவதை நம்பினேன்.

ஆனால், மத்தியக் கிழக்கு நாடுகளை நாம் இப்போது பார்த்தோமானால் அங்குள்ள நிலைமை வேறாக இருக்கிறது. ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பை நெருங்கி வருகிறது.

சிரியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போரால் அந்தப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்தியக் கிழக்கில் பயங்கரவாதிகள் கொட்டமடிக்கின்றனர். அல்-காய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் லிபியாவில் அமெரிக்கத் தூதர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். எனவே, ஒபாமா பொறுப்பேற்றபோது இருந்ததை விட இப்போது மத்தியக் கிழக்கில் நிலைமை மோசமாக இருக்கிறது.

வரலாற்றை உருவாக்குவதில் அமெரிக்காவின் மிகப்பெரிய சக்தியைப் பயன்படுத்த வேண்டியதுதான் அதிபரின் பொறுப்பே தவிர, நமது தலைவிதியைச் சம்பவங்களின் போக்கில் விட்டு விடுவது அல்ல.

இதேபோல், ஈராக்கில் இருந்து அவசர அவசரமாக ராணுவத்தை ஒபாமா வாபஸ் பெற்றதும் தவறாகும். இதனால் அந்நாட்டில் வன்முறை அதிகரித்துள்ளது.

நான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை அதன் பாரம்பரிய வழியில் மீட்டுக் கொண்டு வருவேன் என்றார் மிட் ரோம்னி.