உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/06/2012

| |

கிண்ணம் எங்களுக்குத் தான்: கிறிஸ் கெயில்

நாளை இடம்பெறவுள்ள சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையைத் தோற்கடித்து மேற்கிந்தியத் தீவுகள் சம்பியன் பட்டம் வெல்வது உறுதி என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அவுஸ்ரேலிய அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 205 ஓட்டங்களைக் குவித்திருந்தது. அதன் பின்னர் அவுஸ்ரேலிய அணியை 131 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்திருந்தது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த கிறிஸ் கெயில், டுவென்டி டுவென்டி உலகக்கிண்ணம் தங்களுடையதே எனத் தெரிவித்தார். இலங்கை தங்களை மன்னிக்க வேண்டும் எனத் தெரிவித்த கிறிஸ் கெயில், ஆனால் இந்த உலகக்கிண்ணம் தங்களுடையது எனத் தெரிவித்தார்.

தங்களுக்கு இலங்கை மிகப் பிடித்த நாடு எனத் தெரிவித்த அவர், எனினும் ஞாயிற்றுக்கிழமை மேற்கிந்தியத் தீவுகளே வெற்றிபெறும் எனத் தெரிவித்தார். அது நிச்சயம் எனத் தெரிவித்தார்.

நேற்றைய வெற்றி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு நிச்சயமாகத் தேவைப்பட்ட ஒன்று எனத் தெரிவித்த கிறிஸ் கெயில், அவுஸ்ரேலிய அணி இத்தொடரில் மிகச்சிறப்பான திறமையை வெளிப்படுத்தி வந்ததாகவும், ஆகவே இவ்வெற்றி மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

நாளை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இரவு 7 மணிமுதல் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.