உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/02/2012

| |

கிழக்கு மாகாண சபையில் இன்று திவிநெகும சட்டமூலத்திற்கு அங்கிகாரம்?

இரண்டாவது கிழக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று ஆரம்பமானது. அதன் பின்னர் இன்று சபை ஒத்தி வைக்கப்பட்டது. இன்று மிகவும் முக்கியத்துவம்  வாய்ந்த ஓர் சட்ட மூலமான திவிநெகும சட்டமூலம் இன்று விவாதத்திற்காக எடுத்தக் கொள்ளப்படும். அதாவது மேற்குறித்த சட்டமூலத்தினை நடைமுறைப்படுத்துவதென்றால் மாகாண சபைகளின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்பது உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பாகும். அதன் பிரகாரம் ஏலவே 3மாகாண சபைகள் ஒப்புதல் வழங்கிய நிலையில் இன்று கிழக்கு மாகாண சபையில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ள சட்டமூலம் கடும்வாதப் பிரதிவாதங்களின் பின்னர் அங்கிகரிக்கபடுவதற்கான சாத்தியங்கள் அதிகம் தென்படுகின்றது.
தற்போதைய கிழக்கு மாகாண சபையில் ஆளும்தரப்பில் 22பேரும் எதிர்த் தரப்பில் 15பேரும் இருக்கின்ற நிலையில் எப்படியோ குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் என்பது பலரதும் கருத்து ஆகும். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என்ற கருத்தும் நிலவுகிறது.