10/20/2012

| |

அப்புருவராக மாறி வரும் புலம்பெயர் புலி பினாமிகள்

புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதனின் பங்களிப்புடன் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். அந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கே. பி. அரச தரப்பு சாட்சியாக செயற்பட்டு வருவதாக கூறிய அவர் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப் படவில்லை என்றும் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஊடக அமைச்சில் நடைபெற்றது. இங்கு கே. பி. குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்; சர்வதேச மட்டத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில சமயங்களில் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எமக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடனும் செயற்படவேண்டி யுள்ளது.
யுத்தத்தினூடாக பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் இந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படவில்லை. சுமுகமாக இதற்கு தீர்வு எட்டப்பட வேண்டும். பாராளுமன்ற த்தில் பயங்கரவாதத்துடன்
தொடர்புபட்டிருந்த வர்கள், நாட்டை தீவைத்தவர்கள் போன்றவர்களும் எம். பிகளாக உள்ளனர். கே. பி. தொடர்பிலும் அத்தகைய நிலையே உள்ளது. புலிகளுடன் தொடர்புபட்டிருந்த அவரை நாம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேசுவதற்கு பயன்படுத்தியுள்ளோம். சந்தேக நபரை அரச தரப்பு சாட்சியாக மாற்ற சட்டத்தில் இடமுள்ளது. கே. பி.யும் தற்பொழுது அரச தரப்பு சாட்சியாக பயன்படுத்தப்பட்டுள்ளார். மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளிக்க முடியாது. வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடனான பேச்சுக்களை துரிதப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் இலங்கைக்கு அவர்களை அழைத்து பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பேசலாம்.
இந்த நிலையிலே கே.பி. யை பயன்படுத்தி புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சு நடத்தப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளன. இதனூடாக புலம்பெயர் தமிழ் அமைப்புகளை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரவும் அபிவிருத்திக்கு பங்களிக்கவும் முடியுமாகும்.
கே.பி. வட பகுதியில் அரச சார்பற்ற நிறுவனமொன்றை நடத்த தடையாக இல்லை. அவர் வடக்கின் அபிவிருத்திக்கு உதவி வருகிறார். சர்வதேச மட்டத்தில் நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைத்து வருகிறார். அவரை இந்தியா தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரினால் இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் ஒப்பந்தத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.