உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/06/2012

| |

ஜோர்டான் பாராளுமன்றம் கலைப்பு; மன்னர் உத்தரவு


ஜோர்டான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக மன்னர் அறிவித்தார். ஜோர்டானில் மன்னராட்சி நடக்கிறது. அப்துல்லா மன்னராக உள்ளார். இந்நாட்டின் பாராளுமன்றம் அரசியலமைப்பு சட்டப்படி நேற்று கலைக்கப்பட்டதாக அறிவித்தார்.
பிரதமராக இருந்த பையாஸ் அல்-தாராவென்‌, கடந்த ஜூலை மாதம் புதிய தேர்தல் சீர்திருத்த சட்டம் கொண்டு வந்தார். இதற்கு முக்கிய அமைப்புகளான முஸ்லிம் சகோதரத்துவ கட்சி மற்றும் பிற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இவர்கள் நாட்டினை சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனவும் பார்லிமென்டை கலைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதையடுத்து 120 உறுப்பினர்களை கொண்ட பார்லிமென்ட் கீழ்சபை கலைக்கப்பட்டதாகவும், அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்படும் எனவும் மன்னர் உத்தரவு பிறப்பித்தார்.