உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/03/2012

| |

பேஸ்புக்கில் அவதூறான கருத்துகள்: காதலரை குத்தி கொலை செய்த பெண்

பேஸ்புக்கில் அவதூறான கருத்தை சொன்னதால் கோபமடைந்த இளம்பெண், தனது காதலரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
அமெரிக்காவை ஒட்டி அமைந்துள்ள கரீபியன் தீவு நாடு போர்ட்டோரிகோ. இங்குள்ள கோமரியோ நகரை சேர்ந்தவர் வில்னிலியா சான்சஸ் பால்கன்(வயது 27). இவரது காதலன் ஜீசஸ் ரிவெரா அல்காரின் (வயது 25). 
இருவரும் பல இடங்களுக்கும் சுற்றி வந்தனர்.பேஸ்புக்கின் வாய்ஸ் கால், வீடியோ காலிங் மூலமாகவும் காதலை வளர்த்து வந்தனர்.இந்நிலையில் பால்கன் பற்றி ஜீசஸ் பேஸ்புக்கில் அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதில் கோபமடைந்த பால்கன் காதலன் வீட்டுக்கு சென்றார். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.சம்பவ இடத்தில் 10 வயது சிறுவன், 2 மாத பெண் குழந்தையை தவிர வேறு யாரும் இல்லாததால், பால்கன் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று பொலிசார் கூறுகின்றனர்.பால்கன் பற்றி பேஸ்புக்கில் ஜீசஸ் என்ன சொன்னார் என்பதும் தெரியவில்லை. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.