உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/06/2012

| |

ஆஸி செல்ல முயன்றவர்கள் கைது


நீர்கொழும்பு - ஏத்துக்கால பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க முயன்றி ஒருவரையும் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல், நீர்க்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். 
ஏத்துக்கால சுற்றுலா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சுண்ணாகம் மற்றும் வவுனியா பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
சந்தேக நபர்கள் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.