உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/10/2012

| |

இலங்கைப் பிரஜை இந்தியாவில் கைது

தங்கம் கடத்த முற்பட்டதாகக் கூறப்படும் இலங்கைப் பிரஜையொருவர் இந்தியாவின் பெங்களூர் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் நேற்று கைதுசெய்யப்பட்டார். இவரிடமிருந்து  இந்திய ரூபாவின்படி 53 இலட்சம் ரூபா பெறுமதியான 1.7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

65 வயதான முஹம்மட் ஹஸன் நிஸாம் டென் என்ற இவர் டுபாயிலிருந்து பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்திருந்தார். 

இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், இவரை சோதனைக்குட்படுத்தியபோது இவர் தனது உடம்பினுள் சில உலோகப் பொருட்களை மறைத்துவைத்திருப்பது தெரியவந்தது. இவர் மலக்குடலில் தங்கம் ஒளித்துவைத்திருப்பதை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து 1.75 கிலோகிராம் நிறையுடைய 15 தங்கக்கட்டிகள் இவரது உடம்பிலிருந்து வெளியேற்றப்பட்டன. இவர் தங்ககட்டிகளை கருத்தடை உறையினுள் போட்டு மலக்குடலினுள் செலுத்தியிருந்தார். 

இவருடைய பயண ஆவணங்களை பொலிஸார் மேல் விசாரணைக்காக பொறுப்பேற்றுள்ளனர்.