உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/05/2012

| |

கொள்கை அற்ற கூட்டமைப்பு கூறுப்படும் சாத்தியம்

கட்சி சின்னம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாக பிளவடையக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி சின்னமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தைப் பயன்படுத்திக் கொள்ள சம்பந்தன் தீர்மானித்துள்ளார்.
எனினும், இந்த தீர்மானத்திற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் இணங்கவில்லை.
இதேவேளை, புளொட் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளதாக திவயின சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.