10/27/2012

| |

புத்த கயாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலம்

புனே தொடர் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள், பீகாரில் உள்ள புத்தகயாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. புனேவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த நான்கு தீவிரவாதிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதில் தொடர்புடைய 5வது குற்றவாளி சயீத் மக்பூல் என்பவரை ஐதராபாத்தில் கடந்த 23ம் தேதி டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலத்தின் நந்தெத் பகுதியைச் சேர்ந்த பழ வியாபாரியான மக்பூல் அகில இந்திய மஜ்லிஸ் இதாத்,உல் முஸ்லீமீன் என்ற அமைப்பின் மாவட்ட தலைவர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியானதாக சிறப்பு பிரிவு கமிஷனர் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘சயீத் மக்பூலுக்கு, இம்ரான் என்ற இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதியுடன் முதலில் தொடர்பு ஏற்பட்டது. மக்பூலை, தனது இயக்கத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு இம்ரான் அறிமுகம் செய்து வைத்தார். யூரியா, டீசல், பட்டாசு வெடிமருந்து ஆகியவற்றை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிப்பது பற்றி இந்தியன் முஜாகிதீன் உறுப்பினர்களுக்கு மக்பூல் கற்றுக்கொடுத்தார். பின் கடந்த ஏப்ரல் மாதம் பக்தல் சகோதரர்களிடம், மக்பூலை அறிமுகம் செய்து வைத்தார் இம்ரான். இவர்கள் பீகாரில் உள்ள புத்தகயாவில் தாக்குதல் நடத்த முதலில் திட்டமிட்டிருந்தனர். மியான்மரில் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைக்கு பழிவாங்கும் விதத்தில் இந்த தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டனர். இந்நிலையில் புனே எர்வாடா சிறையில் இருந்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி குவாதீல் சித்திக் கொல்லப்பட்டான். இவ்வாறு ஸ்ரீவஸ்தவா கூறினார்.