உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/10/2012

| |

அப்பாவி தமிழ் மக்களின் உயிரிழப்புக்களையும் ஆதரித்தஆனந்தசங்கரிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவுசெய்தல் விடயத்தில் பேசும் உரிமை கிடையாது! சீ.வி.கே.சிவஞானம்


தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவுசெய்தல் விடயத்தில் பேசும் உரிமை ஆனந்தசங்கரிக்கு கிடையாது எனத் தெரிவித்துள்ள தமிழரசு கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானம் யுத்தத்தையும், அப்பாவி தமிழ் மக்களின் உயிரிழப்புக்களையும் ஆதரித்தசங்கரி கூட்டமைப்பிற்குள் வந்ததே முதல் தவறு எனவும் தெரிவித்துள்ளார்.
“தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கான வேண்டுகோளை வரைவேற்கிறார் சங்கரி” என்ற தலைப்பில் உள்ளூர் நாளேடு ஒன்றில் வெளியான செய்தி குறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பிலேயே மேற்படி விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
குறித்த செய்திக்குறிப்பில் அவர் மேலும் எழுதியுள்ளதாவது,
ஒற்றுமையை உறுதிப்படுத்த எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருப்பதாகவும், மக்களுக்கு தீர்வு கிட்டுவதற்கு உழைக்க ஆயுத்தமாக இருப்பதாகவும், ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த அறிக்கையில் தமிழரசுக் கட்சியின் பெயரை குறிப்பிடாது விமர்சிப்பது பொறுத்தமற்றது.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக “கூட்டமைப்பு கட்சிகளை பயன்படுத்தி பொது வேட்பாளர்களாக போட்டியிட்டு வென்றவர்கள் சிலரை, குறிப்பிட்ட ஒரு கட்சி தனது அங்கத்தவராக சேர்த்தமை ஏனைய கட்சிகளின் தோளில் ஏறி சவாரி விடுவது போலாகிறது” என்பதன் மூலம் சங்கரி சில பராளுமன்ற உறுப்பினர்களை சுட்டியே பேசுகிறார்.
இப்பொழுது இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் எவரும் தமிழரசுக் கட்சி தவிர வேறு எந்தக் கட்சி சார்பிலும் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது மட்டுமல்ல பொது வேட்பாளர்கள் எனக் கூறிக்கொண்டு போட்டியிடவுமில்லை.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்தவர்களின் நிலையும் இதுவே. தமது அரசியல் தளத்தையும் நிலைப்பாட்டையும் அறிந்துகொள்ள முடியாதவர்களா இவர்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழும். இவர்கள் எல்லோரும் அரசியல் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் எங்கே நின்றார்களோ அங்கேதான் நிற்கிறார்கள்.
எனவே ஏனைய கட்சிகளின் தோளில் மட்டுமல்ல வேறு எவரது தோளிலும் ஏறிச் சவாரி செய்யும் தேவை தமிழரசுக் கட்சிக்கு இல்லை. மேலும் முற்றுமுழுதாக ஏற்க முடியாத கருத்துக்கள் வெளியிடப்பட்ட போதெல்லாம் மக்கள் நலன்கருதி மௌனம் சாதித்து ஏனையவர்களுக்கு அவப்பெயரை தாம் ஏற்று பங்குகொள்ள வேண்டியிருந்ததாகவும் திரு.ஆனந்தசங்கரி கூறியிருக்கிறார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தனது நடவடிக்கைகளுக்கும் செயற்பாட்டுக்கும் பொறுப்பேற்கும் தைரியமும் துணிவும் அதற்குண்டு. மேலும், பல விடயங்களில் தமிழ் இனத்தின் நலன்சார்ந்தும் ஒற்றுமை கருதியும் இலங்கைத் தமிழரசுக் கட்சி கடுமையான மௌனம் காத்து வருகின்றது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும் என்றுள்ளது.