உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/04/2012

| |

சாரதியின் கவனக்குறைவால் காவுகொள்ளப்பட்ட சிறுமிபாடசாலை வான் சாரதியின் கவனக்குறைவால் 06வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவமானது அம்பாறை சென்ட்ரல் கேம்ப் வாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


வான் மூலம் பாடசாலைக்கு சென்று வரும் குறித்த சிறுமியினை பாடசாலையிலிருந்து அவரது வீட்டிற்கு கொண்டு வந்து விடும் போது சாரதி தனது இருக்கையில் அமர்ந்தவாறே வானின் பின் பக்க கதவினை திறந்து சிறுமியினை கீழே இறங்குமாறு பணித்துள்ளார். 
சாரதி வான் கதவினை மூடும் போது சிறுமியின் கழுத்துப்பட்டி கதவிடுக்கில் மாட்டிக்கொண்டது. இது எதனையும் அவதானிக்காமல், வானின் பக்க கண்ணாடியை கூட பார்க்காது, குறித்த சாரதி வானை செலுத்தியுள்ளார். வானுடன் இழுத்து செல்லபட்ட சிறுமி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

நேற்று புதன்கிழமை(03.10.2012) மதியம் இடம் பெற்ற இச் சம்பவத்தில் அம்பாறை சென்ட்ரல் கேம்ப் பகுதியை சேர்ந்த நல்லசாமி கிருத்திகா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் நிந்தவூர் C.O.LESTHAKIR சர்வதேச பாடசாலையில்  முதலாம்தரத்தில் கல்வி கற்கும் மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி சம்பவத்தின் பின்னர் ஓடி,ஒளிந்துகொண்ட சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இருந்தாலும் வாகன சாரதிகளின் அசமந்த போக்கும்,கவனமின்மையுமே இவ்வாறான மரணங்களை ஏற்படுத்தி வருகிறது.  தமது பிள்ளைகளை வாகனங்களில் பாடசாலைக்கு அனுப்பும் பெற்றோர் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் எடுக்க வேண்டியது கடமையாக இருக்கிறது.