உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/10/2012

| |

ஏனைய கட்சிகளின் தோளில் ஏறி சவாரி செய்கிறது தமிழ்த தேசியக் கூட்டமைப்பு -- வீ. ஆனந்தசங்கரி

பத்திரிகைச் செய்தி
தேர்தல் முடிந்ததன்பின் எத்தகைய நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வழிப்படுத்தத் தவறியமையே இன்றைய நிலைக்கு காரணமாகும்.
- வீ. ஆனந்தசங்கரி
 தமிழ் மக்கள் சார்பில் சமூக ஆர்வலர்கள் அறிஞர்கள் தமிழக் கூட்டமைப்பை நம்பகரமான தலைமைச் சக்தியாக வலுப்படுத்துமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் காலங்கடந்து விடப்படும் வேண்டுகோளாக இருந்தாலும் அவ்வேண்டுகோளை அமுல்படுத்த வேண்டிய கடப்பாடு சகல தமிழ் மக்களுக்கும் உண்டு. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தீவிரமாக எடுத்திருக்கவேண்டிய முயற்சி வெற்றியளிக்காமல் போனமைக்கான காரணம் ஒரு சிலசக்திகள் குறுகிய மனப்பான்மையோடு செயற்ப்பட்டதே!
தேர்தல் முடிந்ததன்பின் எத்தகைய நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வழிப்படுத்தத் தவறியமையே இன்றைய நிலைக்கு காரணமாகும். தேர்தல் முடிந்தவுடன் சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன். என்னைப் பொறுத்தவரை அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட வேண்டுமென்ற நியாயப்படுத்தக் கூடிய போதிய காரணங்கள் இருந்தும் கூட எதுவித நிபந்தனையுமின்றி  தொடர்ந்து வந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் 3 தடவை தமிழர் விடுதலைக் கூட்டணியும் திரு சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து செயற்ப்பட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற உழைத்தோம். கூட்டமைப்பின் மானத்தைக் காப்பாற்ற 2 உள்ளுராட்சித் மன்றத் தேர்தல்களில் நிராகரிக்கப்படவிருந்த வேட்புமனுக்களைத் தப்பவைத்து அவ்விரு சபைகளிலும் ஆட்சியை அமைத்தோம். தீவிரப் போக்குக் கொண்ட ஒரு சிலரின் செயற்பாடுகள் எம்மை நோகடித்திருந்தும் மக்களுக்காக அத்தனையையும் தாங்கிக்கொண்டு ஒற்றுமையை வலியுறுத்தி வந்துள்ளோம்.
கூட்டமைப்பு கட்சிகளை பயன்படுத்தி பொது வேட்பாளர்களாக போட்டியிட்டு வென்றவர்கள் சிலரை குறிப்பிட்ட ஒரு கட்சி தனது  அங்கத்தவராகச் சேர்த்தமை ஏனைய கட்சிகளின் தோளில் ஏறி சவாரி விடுவது போலாகிறது. பெயரளவில்தான் தமிழ்த தேசியக் கூட்டமைப்பு இயங்குகிறதே தவிர கடந்த 2 வருடங்களில் எச்சந்தர்ப்பத்திலும் எம்முடன் எதுவித கலந்தாலோசனையையும் நடத்தாமல் செயற்படுகின்றனர். ஆனால் பல சந்தர்ப்பங்களில் முற்று முழுதாக ஏற்க முடியாத கருத்துக்கள் வெளியிடப்பட்ட போதெல்லாம் மக்கள் நலன்கருதி மௌனம் சாதித்து ஏனையவர்களுக்குச் சேரவேண்டிய அவப்பெயரை நாம் ஏற்றுப்பங்குகொள்ளவேண்டியிருந்தது. அவற்றில் சிலவற்றைக் கூறி - 1972ல் இருந்த நிலையிலும் பார்க்க பலமடங்கு மோசமாக தமிழர் நிலை மாறியுள்ள இன்றைய நிலையில் மேலும் எமது மக்களின் இன்னல்கள்  அதிகரிக்கும் என்பதால் மிகச் சிரமப்பட்டு மௌனம் காக்கின்றோம்.
நாட்டின் நிலமையை அறியாத சிலர் சுயநலநோக்கோடு செயற்படும் வேளை நிலமைகளைத் தெளிவாக அறிந்த நாங்கள் ஒற்றுமையை உறுதிப்படுத்த எத்தகைய தியாகத்தையும் செய்து மக்களின் நிரந்தர தீர்வுக்கு உழகை;கத் தயாராக இருக்கின்றோம்.
வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்
தமிழர் விடுதலைக் கூட்டணி