உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/10/2012

| |

இலங்கையர்களின் பயண எச்சரிக்கை நீக்கம் ; வெளிவிவகார அமைச்சு

தமிழகத்துக்கு செல்லும் இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்ட பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
 கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் செல்லும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதனால் அரசு பயண எச்சரிக்கையினைப் பிறப்பித்திருந்தது எனினும் அந்த பயண எச்சரிக்கையினை இன்று நீக்கியுள்ளதாக வெளிவிவகாரத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி அண்மையில் இலங்கை யாத்திரிகள் பலர் இந்தியாவின் தஞ்சாவூர் பூண்டிமாதா ஆலயத்திற்கு சென்றிருந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டதுடன் அவர்கள் மீது தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து இலங்கை யாத்திரிகள் தஞ்சாவூரில் உள்ள தேவாலயமொன்றிற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு திரும்பியனுப்பபட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தினை அடுத்தே பயண எச்சரிக்கையினை இலங்கை அரசாங்கம் மறு அறிவித்தல் வரை விதித்திருந்தது. 
இதன்படி, இலங்கை அரசாங்கத்திற்கும் பல தரப்பிலிருந்து அழுத்தங்கள் பிறப்பிக்கப்பட்டதுடன் இரு நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது.
அதன்படி தமிழகத்திற்கு வரும் இலங்கையர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதிப்பாட்டினை அளித்திருந்தது. அதன்படி பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.