உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/05/2012

| |

அப்பிள் நிறுவன மீள் விற்பனை நிலையம் திறந்துவைப்பு



பியூச்சர்வேர்ள்ட் லங்கா தனியார் நிறுவனத்தின் அப்பிள் நிறுவன தயாரிப்புப் பொருட்கள் மீள் விற்பனை நிலையம் வியாழக்கிழமை யாழ். ஸ்ரான்லி வீதியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா  இம்மீள் விற்பனை நிலையத்தை திறந்துவைத்தார். 
இந்நிகழ்வில் அப்பிள் நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் மானிக் பற்றிக்காரோ, அப்பிள் நிறுவனத்தின் முகாமையாளர் தர்சன் தசாநாயக்க யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.