உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/10/2012

| |

கடாபியை கொன்றது பிரான்ஸ் உளவு பிரிவு:- "டெய்லி மெயில்''


லிபியாவின் மாஜி தலைவர், கடாபியை சுட்டுக்கொன்றது, பிரான்ஸ் நாட்டு உளவு பிரிவினர் என்பது தற்போது தெரிய வந்து உள்ளது. லிபியாவை, 42 ஆண்டு காலம்,

ஆட்சி செய்தவர் மும்மர் கடாபி, 69. துனிசியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட கிளர்ச்சியை போன்று லிபியாவிலும், கடாபியை பதவி விலகக் கோரி, மக்கள் தொடர் போராட்டத்தில், ஈடுபட்டனர். ஆப்ரிக்க கூலிப்படையினரை வைத்து, போராட்டக்காரர்களை கொன்று குவித்தார் கடாபி. இதன் காரணமாக, கடாபியின் வெளிநாட்டு கணக்குகள், முடக்கப்பட்டன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், லிபியா மீது, பொருளாதார தடை விதித்தன. ஒரு கட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் ஆயுதம் ஏந்தி, அரசு படைக்கு எதிராக சண்டையிட்டனர். கடாபியின் மகனை சிறை பிடித்தனர். அரண்மனையிலிருந்து ஓடி தலைமறைவானார் கடாபி. கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 20ம்தேதி, தனது சொந்த ஊரான சிர்டியில், கால்வாய் ஒன்றில் மறைந்திருந்த போது, நேட்டோ படைகளின் உதவியுடன், கிளர்ச்சியாளர்கள், கடாபியை சுற்றி வளைத்தனர். கடாபி சரணடைய முன்வந்த போதும், அவர் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார். பிரான்ஸ் அதிபராக இருந்த நிக்கோலஸ் சர்கோசியின், உத்தரவின் பேரில், பிரான்ஸ் நாட்டின் உளவுப் பிரிவினர் தான் கடாபியை சுட்டுக்கொன்றனர் என, "டெய்லி மெயில்' என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.