10/27/2012

| |

உலக மக்களை அச்சுறுத்தும் கொடூர நோய்கள்

உலக மக்களை அச்சுறுத்தும் 2கொடிய நோய்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
அதில் ஒன்று நீரிழிவு, மற்றொன்று உயர் இரத்த அழுத்தம் ஆகும்.
உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் சராசரியாக 3பேரில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தில் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், நீரிழிவினால் 10சதவீதம் பேரும் அவதிப்படுகிறார்கள் என்றும் புள்ளி விவரம் கூறுகிறது.
இதன்படி பார்த்தால் தற்போது உலக அளவில் ஏறத்தாழ 50கோடி பேர்(12சதவீதம்) உடல் பருமன் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
இதிலும் குறிப்பாக இருதய சம்பந்தப்பட்ட பாதிப்பு குறைந்த வருவாய் மற்றும் மத்திய வருவாய் உள்ள நாடுகளில் 40சதவீதம் அளவிற்கு இருக்கிறது. 25வயது இளைஞர்கள் கூட பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே இந்த கொடிய நோய்களில் இருந்து மக்களை காப்பாற்ற பரவலாக மருத்துவ வசதிகள், குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்வது மிகவும் அவசியம் என்று உலக சுகாதார கழக டைரக்டர் ஜெனரல் மார்க்கரெட் ஷான் தெரிவித்துள்ளார்.