உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/04/2012

| |

முஹம்மது நபியை கொச்சைப்படுத்தும் திரைப்படம்; அமெரிக்க ஜனாதிபதிக்கு வை.எம்.எம்.ஏ பேரவை கடிதம்

அமெரிக்க பிரஜையினால் தயாரிக்கப்பட் இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தும் வகையிலான திரைப்படம் தொடர்பாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. 

இந்த கடிதம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிஸன் ஊடாக அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த கடிதத்தின் பிரதிகள் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளின்டன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே.சிஸன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் பிரதிநிகளுக்கும் அமெரிக்க தூதுவர் சிஸன் ஆகியோருக்கு இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே முஹம்மது நபி (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாவிற்கானம் கடிதம் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"அமெரிக்க பிரஜையினால் தயாரிக்கப்பட் இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை கொச்சைப்படுத்தும் வகையிலான திரைப்படம் தொடர்பாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை விசனமடைந்துள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் பெருங்கொத்தளிப்பை தோற்றுவித்துள்ளது. நீங்கள் அமெரிக்காவுக்கும் முஸ்லிம் உலகிற்கும் இடையில் நல்ல புரிந்துணர்வை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள்.

இச்சந்தர்ப்பத்தில் உலகெங்கும் பரந்துள்ள முஸ்லிம்களை ஆத்திரமூட்டுவதே இந்த படத்தை தயாரித்தவரின் நோக்கம் என்பது தெளிவாக தெரிகின்றது. அமெரிக்க அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் எந்தவொரு சமய நம்பிக்கைக்கும் எதிராக வெறுப்பை தூண்டிவிடும் வகையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் நிறைவேற்று குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்டன தீர்மானத்திற்கு அமைய, இஸ்லாம் மீதான இந்த வெறுக்கத்தக்க உண்மையேதும் இல்லாத அவதூறான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என நாம் உங்களையும் அமெரிக்க அரசாங்கத்தையும் கேட்கின்றோம்.

அத்துடன் இனிமேல் எந்தவொரு சமயமும் இவ்வாறாக அபகரீத்திக்கு உட்படுத்தப்படாது இருக்க பரிகார நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையும் கோரிக்கை விடுக்கின்றது. சகல வன்முறை செயற்பாடுகளையும் கண்டிக்கும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை எங்கள் உணர்வுகள் மற்றும் விசனங்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு தீர்த்துவைக்கப்படும் என எதிர்பார்க்கின்றது".