உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/06/2012

| |

ஐ.தே.க. தலைமைத்துவத்துக்கு எதிரான இடைக்கால தடையுத்தரவு மனு நிராகரிப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்துக்கு எதிராக அக்கட்சியின் தென் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு கோரும் மனு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது. 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரின் 6 வருட நிரந்தர நியமனம் சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் எனவும் இவர்கள் மீது இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

தடையுத்தரவு நிராகரிக்கப்பட்ட போதிலும் ரணில் விக்கிரமசிங்கவும் திஸ்ஸ அத்தநாயக்கவும் தமது பதில்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 23ஆம் திகதிக்கு முன் தாக்கல் செய்ய வேண்டுமென நீதவான் ஜி.ஏ.டி.கணேபொல கட்டளையிட்டார்.