10/16/2012

| |

இலங்கை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

தெவிநுவர கரைக்கு அப்பால் சென்றுகொண்டிருந்த 5 இலங்கை மீனவர்கள் கடற்கொள்ளையர்களினால் தாக்கப்பட்டு கடலில் வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வணிகக் கப்பலொன்றில் சென்றவர்களினால் 2 மீனவர்கள் காப்பாற்றப்பட்டு கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இவ்விரு மீனவர்களிடமும் விசாரணை மேற்கொள்வதற்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடலில் வீசப்பட்டதாகக் கூறப்படும் ஏனைய 3 மீனவர்கள் பற்றிய தகவல் எதுவும் இவர்களுக்கு தெரியவில்லையெனவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.