Election 2018

10/10/2012

| |

திவிநெகும சட்டமூலம் மீதான விவாதம் கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்ற போது சி.சந்திரகாந்தன் ஆற்றிய உரை

இரண்டாவது கிழக்கு மாகாண சபை அமர்வின் 2ஆவது நாளிலே திவிநெகும சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளபட்டது. இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆற்றிய உரை:
கௌரவ தவிசாளர் அவர்களே!
இன்று கிழக்கு மாகாண சபையின் ஒப்புதலுக்காக சபையிலே சமாப்பிக்கபட்டிருககின்ற திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் எனக்கும் கருத்துரை வழங்குவதற்கு சந்தர்ப்பம் அளித்த அவைத் தலைவர் அவர்களுக்கு முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விசேடமாக உங்களுக்குத் தெரியும் இந்தக் கிழக்கு மாகாணசபை உருவாகியது முதலாவது முறை மிக இனிமையான நாட்களாக மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்து கொடுத்தது. அந்த நேரத்திலும் கூட பல சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டது. இங்கு வட்டார முறைமை, நாடு, நகர அபிவிருத்திச் சட்டம், அது போன்று நிலப்பங்கீடு, நில சம்பந்தமான சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டன.
அவையெல்லாம் எம்முடைய மாகாணத்தின் மக்களுக்கு நேரடியான பாதிப்பு, நிலங்கள் மத்தியில் பாதிப்பு, சமூகத்திற்குள் பிரச்சனையைக் கொண்டு வருகின்ற விடயங்களாக நாங்கள் பார்க்கின்றோம்.
அந்த அடிப்படையில் நாங்கள் ஆளுங்கட்சியாக இருந்தும் கூட அதை நிராகரித்துத் திருப்பி அனுப்பிய வரலாறுகளை இங்கே எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கின்ற உறுப்பினர்கள் கூட எங்களுக்குச் சுட்டிக் காட்டியிருந்தமை நாங்கள் மறுக்க முடியாததாக உள்ளது.
அந்த அடிப்படையில் இன்று நாங்கள் விவாதித்துக் கொண்டிருக்கின்ற திவிநெகும சட்டமூலமானது உண்மையிலேயே பொருளாதார அபிவிருத்தி சம்பந்தமாக குறிப்பாகக் கிராமிய பொருளாதாரம், மனைப் பொருளாதாரம், ஒரு வீட்டிலே இருக்கின்ற மிகக் கஸ்டப்பட்டு வாழ்கின்ற, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்ற மக்கள் தங்களுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தங்களுடைய காணியிலே இருந்து விவசாயத்துறையை மேம்படுத்த வேண்டும் அல்லது கூட்டாகச் சேர்ந்து உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும். உற்பத்தி செய்கின்ற பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். எம்முடைய மாகாணத்திலும், இந்த நாட்டில் இருக்கின்ற வறுமையை ஒழிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட நல்லதொரு திட்டம்.
அதற்குக் குறிப்பாக சமூர்த்தி அதிகாரசபை என்பது இன்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு சபை. அது போன்று உடரட்ட, ஏனைய தெற்கு அபிவிருத்தி அதிகாரசபை என்பன இங்கு தாக்கம் செலுத்தாத விடயங்கள் இருந்தாலும் கூட, பொருளாதார நன்மை கருதி கொண்டு வருகின்ற இந்த விடயத்தை கௌரவமான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மிகப் பலமாக எதிர்க்கின்றார்கள். எங்களுடைய கௌரவ ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கூறியது போல நான் 05 நாட்களுக்கு முன்னரே செய்திகளிலே பார்த்திருந்தேன். இதே கிழக்கு மானகாணசபையிலே எங்களுடைய கட்சி எதிர்க்கும், அந்தக் கட்;சி எதிர்க்கும் என்ற செய்தி வந்தது.
நான் பார்த்தேன், மகிழ்ச்சிடையந்தேன். ஏன் என்று தெரியுமா? அன்பார்ந்த கௌரவ தவிசாளர் அவர்களே! இந்த நாட்டிலே மாகாணசபை முறைமை என்பது உருவாக்கப்பட்டது இன்றல்ல. 24 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. இந்த மாகாணசபை உருவாக்கப்பட்டு மிக நீண்ட காலங்களாக 02 தசாப்த காலங்கள்,; அப்படியே நின்றிருந்தது. 20 வருடங்களுக்குப் பின்னர் நாங்கள் பொறுப்பெடுத்து 04 வருடங்கள் இதை நடத்தினோம். அப்பொழுது யாருமே வாய் திறக்காமல் இருந்து விட்டு 60 வருடங்களாக, 70 வருடங்களாக ஏன் 100 வருடங்களாகக் கூட ஈழக் கனவிலே மிதந்தவர்கள். இவையெல்லாம் தேவையில்லை நாங்கள் ஈழத்தைத் தான் பெற்றுத் தருவோம், சமஸ்டியைத் தான் பெற்றுத் தருவோம், இதே வேளை எங்களுக்கு வேறு வழியில்லை என்று சமஸ்டிக் கட்சியை ஆரம்பித்து வீட்டுச் சின்னத்திலே வந்தவர்கள் இன்று 24 வருடங்களுக்குப் பின்னர் குறைந்த பட்சம் கிராமப் பொருளாதாரத்தையாவது கொழும்பெடுக்கக் கூடாது எங்களுக்குள்ளே கொண்டு வாருங்கள் என்று எதிர்ப்புத் தெரிவிப்பது மிக விசித்திரமாக இருப்பதனை நான் அதிசயமான விடயமாகப் பார்க்கின்றேன்.
அந்த அடிப்படையில் இவ்வளவு காலமாக இயங்காமல் கிடந்த நிர்வாகத்தை நீங்கள் எதிர்க்கட்சியில் இருந்து வந்து சுட்டிக் காட்டுகின்ற அளவுக்காவது உங்களுடைய அரசியல் நிலைப்பாட்டிலே மாற்றம் கொண்டு வருவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். ஆனால் கவலையடைகின்றேன். ஏனென்றால் எனக்கு முன்னர் பேசிய பல கௌரவ உறுப்பினர்கள் தண்ணீரை இட்டு வளர்க்கின்ற பயிரை, கண்ணீரையும், இரத்தத்தையும் இட்டு வளர்த்தார்கள் எனச் சொன்னார்கள். நான் ஆச்சரியமாகப் பார்த்தேன்,நான் உள்ளே கவலைப்பட்டேன். ஏன்? பயிரை தண்ணீர் ஊற்றித்தான் வளர்க்க வேண்டும், அதற்குக் கண்ணீர் ஊற்றி வளர்க்க முடியாது, இரத்தம் ஊற்றி வளர்க்க முடியாது.
நீங்கள் பாரதியின் பாட்டை எங்களுடைய போராட்டத்தோடு சுட்டிக் காட்டுகின்றீர்கள். இந்த மண்ணிலே நடந்த போராட்டங்கள், கண்ணீரோட்டங்கள், இரத்தக்களரிகள் போன்றவற்றை நீங்கள் தான் உருவாக்கினீர்கள். அது பாரதி பாடிய பாட்டு என்பது எமக்குத் தெரியும். ஆனால் உங்களுடைய தமிழரசுக்கட்சி ஊழல், நீங்கள் சமஸ்டிக்கட்சி என்று சொல்லி இந்த நாட்டிலே சமஸ்டி பெற்றுத் தருவதாக உருவாக்கினீர்கள். எங்கே உங்களது சமஸ்டி? இந்த நீங்கள் 1957ம் ஆண்டு பண்டாவை கொண்டு வந்தீர்கள்,பின்பு நீங்கள் 1965ம் ஆண்டு மாவட்ட சபையைப் பொறுப்பேற்று டட்லியோடு சேர்ந்து இராஜதந்திரம் என்றீர்கள்;.
அந்த நேரத்திலே நீங்கள் எல்லாம் தமிழர்களாக ஒன்றுபட வேண்டும், ஒன்றுபட வேண்டும் என்று கூக்குரல் இட்ட போது யாழ்ப்பாணத்திலே எத்தனை மக்கள் 5000ற்கு மேற்பட்ட மக்கள் பௌத்த மதத்திற்கு மாறினார்கள். இதையெல்லாம் யாரும் மறந்து விடமுடியாது. மாறி அவர்கள் பௌத்த திராவிடக் கழகத்தை உருவாக்கினார்கள். அந்த நேரத்தில் தான் உங்கள் கழகத்தை விட்டு வெளியேறிப் போனீர்கள். ஏன் நான் இதைச் சொல்கிறேன் என்றால் நீங்கள் தான் கண்ணீரும், இரத்தமும் ஓடுவதற்கு களத்தை அமைத்தவர்கள்.
இந்த நாட்டிலே சிங்களவர்களுக்கிடையிலான போட்டியினை கடுமையாக அமுல்படுத்தி தமிழர்களாக ஒன்றுபட வேண்டும் என்று நீங்கள் தான் வாதத்தைக் கொண்டு வந்தீர்கள். அதன் பின்னரும் நீங்கள் கேட்ட சமஸ்டி அடிப்படையிலே குறைந்த பட்சம் பண்டாசெல்வா ஒப்பந்தத்திலே இருந்த அடிப்படையிலே வந்த 1987ம் ஆண்டு மாகாண சபையிலே இலங்கை இந்திய அரசு ஒப்பந்தத்திலே குறைந்த பட்சம் அதாவது எடுத்துத்தர முடியுமா? என்று நீங்கள் துணிந்து குரல் கொடுக்காமல் இருந்து விட்டு அன்று அவர்கள் வரலாற்றில் எடுத்து நடத்தாமல் ஆக்கிவிட்டுஈ இன்று உங்கள் நிலைமை என்ன? இன்றும் சர்வதேசம் பெற்றுத் தரும் ;என்று சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள். ஏன் இந்தக் கிராமமட்ட அபிவிருத்தியை நீங்கள் தடை செய்ய வேண்டும்? நீங்கள் மாற்று உலகத்திலே அல்லது ஐரோப்பிய யூனியனிலே அல்லது அமெரிக்காவில் நம்பிக்கை வைத்து பேசினோர்கள், அங்கு போய்ப் பேசுங்கள். பாராளுமன்றக் கொமிற்றிக்குள் போய் இது காணாது, ஆளுநருடைய அதிகாரத்தைக் குறையுங்கள் என்று பேசுங்கள். அதை விட்டு விட்டு கிராமத்திலே நாங்கள் கத்தரிச்செடி வளர்ப்பதற்கும், மிளகாய்ச்செடி வளர்ப்பதற்கும் எங்களுடைய உற்பத்தியை அதிகரித்து, தேசிய உற்பத்தியை அதிகரித்து, வெளிநாட்டு சந்தை வாய்ப்பைப் பெறுவதற்கான எங்களது முயற்சியை, பொருளாதார வளர்ச்சியை தடுப்பதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? உங்களிடம் என்ன திட்டம் இருக்கிறது? ஒன்றுமே கிடையாது.
இந்தத் திட்டத்திலே, இந்த சட்டமூலத்திலே 13வது திருத்தத்திலே எங்களுக்குக் கையளிக்கப்படுகின்ற சட்டமூலத்திலே அதே கிராமியப் பொருளாதாரத்தை நாங்கள் தடை செய்கின்றோம் இனி மாகாணசபையிலே உங்களால் ஒரு நீதிச்சட்டத்தை கிராமிய அபிவிருத்தி தொடர்பாக உருவாக்க முடியாது என்று கூறி அடகு வைத்திருந்தால் நாங்கள் இந்தத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க முடியும். அப்படி இதிலே சொல்லவில்லை. ஏற்கனவே இங்கே கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையிலே ஒரு திணைக்களத்தை உருவாக்குவதற்கு அதிகாரம் கேட்கப்பட்டிருக்கின்றது. அவர்களால் செய்ய முடியும். நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர் என்றால் 02 வாரங்கள் எங்களுடைய எதிர்க்கட்சி தேசிய ரீதியான எதிர்க்கட்சியின் சிரேஸ்ட தலைவர்களுடனான கௌரவ உறுப்பினர் தயாகமகே 02 கிழமை அல்ல 02 வருடங்கள் ஏன் நீங்கள் மரணிக்கும் வரை காலம் தந்தால் கூட இதற்கு நீங்கள் முடிவு தரமாட்டீர்கள். அது தான் உங்களுடைய வரலாறு.
கிழக்கு மண்ணைத் தமிழர்கள் ஆளவேண்டும ;என்று கூறிக் கொண்டு இவ்வாறு வெளிநாட்டிலிருப்பவர்களின் பணங்களை வைத்துக் கொண்டு மக்களுக்கு ஒன்றும் செய்யாமல் அரசியல் செய்து உங்களுக்கான சபைத் தலைவர், மாகாணசபை உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளை எடுப்பீர்களே தவிர கஸ்டப்பட்டு பட்டிணி கிடக்கின்ற மக்கள் இன்றும் கூட உடுக்கத் துணியில்லாமல் அங்கே கீரைத் தோட்டங்களுக்குப் பணி செய்கின்ற இவ்வாறான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த என்ன திட்டம் இருக்கின்றது இந்தக் கட்சியிடம்? ஓன்றுமே இல்லாமல் மக்கள் தொடர்பான திட்டம் எதுவுமில்லாமல் ஏதாவது வந்தால் அரசாங்கத்துடன் எதிர்க்க வேண்டும். அரசாங்கத்தை எதிர்ப்பதற்கான மகிந்தராஜபக்ஷ அரசாங்கம் முன்மொழிகின்ற மகிந்த சிந்தனையை தடுப்பதற்கான ஒரு திட்டமாக நீங்கள் உருவாக்குங்கள். கொழும்பிலே உள்ள மாற்றுத்திட்ட கொள்கைக்குழு என்ற அமைப்பு அமெரிக்காவில் இருந்து, நோர்வேயில் இருந்து ஏராளமான காசு வாங்கிக் கொள்கின்றது.
அது போன்று எங்களுடைய முதலாவது மாகாணசபை கலைக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சராக அந்த நேரத்தில் நாங்கள் இருந்த போது அங்கீகாரம் கொடுத்த பொழுது அதைத் தடுப்பதற்கு எங்கிருந்தோ வெளிநாட்டு நிதிகளை எடுத்துக் கொண்டு பலர் வந்து உச்ச நீதிமன்றம் சென்றார்கள். என்ன நடந்தது? ஈற்றிலே நாங்கள் தான் வென்றோம். மாகாணசபை மீண்டும் கலைக்கப்பட்டு நடத்தப்பட்டு நாங்கள் புதிய மாகாணசபையை உருவாக்கியிருக்கின்றோம். அந்த அடிப்படையில் தமிழர்கள் நீதிக்காக தமிழர்களுக்காகப் போராடுகின்றார்கள் என்று அங்கு போராடிய பல சட்டத்தரணிகள் நிதிகளைப் பெற்றுக் கொண்டார்கள் வெளிநாட்டு நிதிகளையும், கட்சி நிதிகளையும். பாவம் மக்களுக்கு என்ன நடந்தது?
ஆனால் பத்திரிகைகள் முன்னுரிமை அளித்து செய்திகள் வெளியிட்டது. இன்று நான் பார்த்தேன் எல்லாப் பத்திரிகைகளும் செய்தி வெளியிடுகின்றது. ஏதோ கிழக்கு மாகாணம் பறிபோகப் போகின்றது, அதற்கு சில கட்சிகள் துணை போவதா? முஸ்லீம் கட்சிகள் துணை போவதா? ஏன்றெல்லாம் சொல்கிறார்கள். என்ன நடக்கிறது? ஒன்றும் நடக்கவில்லை. இந்த இத்துப் போன பேச்சைக் கேட்டுக் கேட்டே அலுத்துப் போன மக்கள். நீங்கள் ஒன்றுமே பெற்றுத் தரமாட்டீர்கள், நான் அடித்துச் சொல்கிறேன். இந்த மாகாணசபையையாவது நாங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதையிட்டுப் பலமான நம்பிக்கை கொண்டுதான் நாங்கள் முதலாவதாக 2008ம் ஆண்டு இந்த மாகாணசபையைப் பொறுப்பேற்றோம்.
உங்களுடைய பேச்சைக் கேட்டு நீங்கள் சமஸ்டி பெற்றுத் தருவீர்கள், இந்தியன் தருவான், அமெரிக்கன் தருவான் என்று உங்களுடன் நின்றிருந்தால் நாங்களும் முள்ளிவாய்க்காலிலே மரணித்திருப்போம். எங்களுடைய ஆவி என்று சொல்லி நீங்கள் என்னுடைய ஊரிலேயே போய் மாவீரன் பிள்ளையான் பேசுகிறார், வாக்களியுங்கள் மக்களே என்று வாக்குக் கேட்டிருப்பீர்கள். பாவம் உங்களை நம்பி இறந்து போன மக்கள், ஒன்றுமே இல்லாமல் ஏழைகளாக இருக்கிறார்கள். விசேடமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த தலைவர்களின் பேச்சைக் கேட்டு இன்னமும் அழிவதற்கு இந்தக் கிழக்கு மண் தயாரில்லை. இன்று முஸ்லீம்களைப் பற்றிப் பேசுகிறார்கள். பாவம் முஸ்லீம்கள் 1990ம் ஆண்டு வடபகுதியில் இருந்து விரட்டப்பட்ட பொழுது இந்தத் தமிழரசுக்கட்சி சம்பந்தர் இருந்தார். யாரும் வாய் திறக்கவில்லை. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடந்து ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள், கூட்டாட்சி நடத்துகின்றார்கள்.
மக்களைக் குழப்புகின்ற, திசை திருப்புகின்ற, பழிவாங்குகின்ற உணர்வுகள் எல்லாம் எங்கிருந்தோ எடுக்கப்பட்டு பாவம் எங்கள் இனம் அழிக்கப்பட்டு, சின்னா பின்னமாக்கி, சிதைந்து, கூனிக் குறுகிப் போய் இருக்கிறது. ஏனைய இனங்களையும் குழப்பி மீண்டும் கிழக்கைக் குழப்புவதற்கு நாங்கள் தயாரில்லை. அதற்காகத் தான் மக்கள் எங்களுக்கு ஆணை வழங்கியிருக்கிறார்கள். மக்களுடைய ஆணையில் நின்று கொண்டு இந்த மண்ணில் உண்மையான அமைதியையும், நிம்மதியையும் கொண்டு வருவதற்கு இந்த மக்களின் வறுமையையும், பட்டிணியையும் நீக்குவதற்கு நாங்கள் கடைசி வரைக்கும் அரசாங்கத்தோடு கைகோர்த்துச் செயற்பட இருக்கின்றோம். அதை நாங்கள் செய்து காட்டுவோம்.
ஏனென்றால் நீங்கள் எல்லாம் ஆதாரம் இல்லாமல் கதைக்கா விட்டாலும் ஆதாரங்களைப் பாருங்கள் 2008ம் ஆண்டு தொடக்கம் 2012ம் ஆண்டு வரைக்கும் மத்திய வங்கியின் அறிக்கைப்படி கிழக்கு மாகாணத்திலே வறுமை ஒழிக்கப்பட்டிருக்கின்றா? இல்லையா?, விவசாயத்துறை வளர்ந்திருக்கின்றதா? இல்லையா?, கல்வித்துறை மேம்பட்டிருக்கின்றதா? இல்லையா?, எங்களுடைய சுகாதாரத்துறையிலே சிறுவர் இறப்புக் குறைக்கப்பட்டிருக்கிறதா? இல்லையா? என்கின்ற பல விடயங்களை நீங்கள் பார்க்க முடியும். ஏன் நான் சொன்னேன் என்றால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை நாங்கள் அரசாங்கத்தோடு இணைந்து சாதகமானவற்றைப் பேசி, எதிர்ப்பானவற்றை திருப்பி, இணக்கப்பாட்டோடு அரசோடு செய்து காட்டியிருக்கின்றோம். எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகள் இலங்கையில் சுதந்திரம் ஏற்பட்ட காலம் தொடக்கம் இன்று வரைக்கும் எதிர்ப்புப் பேசிப் பேசி தாங்கள் மட்டும் வாழ்ந்தார்களே தவிர சமூகம் அழிந்து சின்னா பின்னமாகி இருக்கின்றது.
தன்னுடைய பிள்ளை, தன்னுடைய பிள்ளைக்குப் படிப்பு, தனக்கென்று வீடு, தனக்கென்று பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இந்த மக்களை இந்த மண்ணிலே கடைசி வரைக்கும் வாழ்ந்து மரணிக்கப் போகின்ற மகக்ளுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சட்டமூலத்தை எந்த மனச்சாட்சியுடைய அரசியல்வாதியும் திருப்பி அனுப்ப முடியாது. ஆகையால் இவற்றை நாங்கள் ஆளுங்கட்சி என்ற அடிப்படையிலே இவர்கள் சொல்கின்ற காரணத்தால் காலத்தைக் கடத்திக் கொண்டு இருக்க முடியாது. உலகம் மிக வேகமாக வளர்கிறது, பொருளாதாரத்திலே போட்டி, சீனாவிலே போட்டி, இந்தியாவிலே போட்டி ஏன் இலங்கை போட்டியிடக் கூடாது. ஏன் அந்த அடிப்படையில் எங்களுடைய மாகாணம் வளரக் கூடாது? அந்த அடிப்படையில் மாகாண மக்களைச் சிந்தித்து இந்தக் கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தைக் குறைப்பதற்கான எந்த இடமும் இந்தச் சட்டமூலத்தில் இல்லை. ஆகையால் நாங்கள் மக்களுக்காக இதைச் செய்கின்றோம். மக்களை வாழவைப்பதற்காக வந்த அரசியல் அடிப்படையிலே இந்தச் சட்டமூலத்தை ஆளுங்கட்சியான அனைவரும் இதனை அங்கீகரிக்கப் போகின்றோம். அந்த அடிப்படையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைவரும் எதிர்காலத்திலும் முடிந்தால் மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவி செய்யுங்கள் அல்லது வீண்வாதம் செய்ய வேண்டாம் என்று அனைவரையும் அன்பாகக் கேட்டுக் கொண்டு கௌரவத் தவிசாளர் அவர்களே! இன்னமும் நாங்கள் நேரத்தை எடுக்காமல் எங்கள் கௌரவ முதலமைச்சர் உரைக்குப் பின்னால் இந்தச் சட்டமூலத்தை அங்கீகாரமளித்து அதனை நிறைவேற்ற வேண்டும்; எனக் கேட்டு முடித்துக் கொள்கின்றேன்.
நன்றி
வணக்கம்.