உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/09/2012

| |

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வசம் மஞ்சுளவின் விசாரணை

நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர். கல்கிஸை பொலிஸாரினால் சேகரிக்கப்பட்ட கைவிரல் அடையாளம் மற்றும் ஐவரின் வாக்குமூலங்கள் உட்பட அனைத்து தடயங்களும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்கிஸை புனித தோமஸ் கல்லூரிக்கு அருகில் காலை 8.30 மணியளவில் தனது ஜகுவார் காரினுள் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்த நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீது இனந்தெரியாத சிலர் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். தாக்குதலை மேற்கொண்டவர் காரொன்றில் மேலும் மூவருடன் வந்ததாகவும், கைத்துப்பாக்கி ஒன்றினை வைத்து “நீதானா அவன்” என்று கேட்டு தாக்கியதாகவும் தனது வாக்குமூலத்தை மஞ்சுள பதிவுசெய்துள்ளார். அத்தோடு தனது கையடக்கத் தொலைபேசியையும் தாக்குதல் மேற்கொண்டவர் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தனது வாக்குமூலத்தில் மேலும் தெரிவித்துள்ளார் மஞ்சுள.

இந்நிலையிலேயே நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.