உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/11/2012

| |

கிரேக்கக் கடன் நெருக்கடி பற்றிய மெர்க்கெலின் கருத்து


கடன் நெருக்கடியிலிருந்து விடுபடுவதில் கிரேக்கத்திற்கு முக்கிய முன்னேற்றங்கள் கிடைத்துள்ளன. தொடர்புடைய இறுக்கமான நடவடிக்கைகளையும் சீர்திருத்த ஆவணங்களின் நடைமுறைப்படுத்துதலைக் கிரேக்கம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று கிரேக்கத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனி தலைமையமைச்சர் அங்கேலா மெர்க்கெல் அம்மையார் 9ம் நாள் தெரிவித்தார்.

கிரேக்கத்தின் முக்கிய தொழிற்சங்க நிறுவனங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 80 ஆயிரம் பேர், கிரேக்க அரசு மேற்கொண்டு வரும் இறுக்கமான நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையில், அதே நாள், ஏதன்ஸ் நகரின் மையத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சி மாநாடு, 18ம் நாள் நடைபெறவுள்ளது. 3150 கோடி யூரோ கடனுதவி வழங்கி, கிரேக்கம் நிதிச் சரிப்படுத்தல் இலக்கை நனவாக்குவதற்கான காலக்கெடுவை 2016ம் ஆண்டுக்கு நீடிப்பதை, இம்மாநாடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கிரேக்கம் விரும்புவதாகத் தெரிகிறது.