10/16/2012

| |

முஸ்லிம் விஞ்ஞானிகளுக்கு மட்டும் நோபல் பரிசு: ஈரான் அதிரடி அறிவிப்பு

சர்வதேச நோபல் பரிசுக்கு போட்டியாக முஸ்லிம் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளை கௌரவிக்கும் வகையில் நோபல் பரிசு வழங்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.
இயற்பியல், வேதியியல் உள்பட 6 அறிவியல் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சுவீடன் அகடமி ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் நோபல் பரிசுக்கு போட்டியாக, முஸ்லிம் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்காக மட்டும் புதிய நோபல் பரிசு வழங்கப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச நோபல் பரிசு கடந்த 1901ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. நூறு ஆண்டுகளுக்கு மேல் இந்த பரிசு வழங்கப்பட்டு வந்தாலும், ஈரானை சேர்ந்த ஒரே ஒரு விஞ்ஞானிக்கு மட்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஈரானில் மனித உரிமைக்காக போராடி வரும் ஷெரின் எபாடி என்ற பெண்ணுக்கு கடந்த 2003ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஆனால் அறிவியல் துறைகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒருவருக்கு கூட வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த ஈரான் முஸ்லிம் விஞ்ஞானிகளுக்கான நோபல் பரிசை அறிவித்துள்ளது.
இது குறித்து ஈரான் அறிவியல் தொழில்நுட்ப துறை துணை அதிபர் நஸ்ரின் சுல்தான்கா கூறுகையில், நபிகள் நாயகம் பெயரில் The Great Prophet World Prize என்ற விருது 2 ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும். 
இந்த பரிசு 3 தொழில்நுட்ப துறைகளில் சிறந்த சாதனை படைக்கும் முஸ்லிம் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.