உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/09/2012

| |

தெற்காசிய மருத்துவ நிறுவனத்துக்கு எதிரான மனு உயர்நீதிமன்றால் தொகையின்றி தள்ளுபடி

தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவனத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம் இன்று செலவு தொகையின்றி தள்ளுபடி செய்தது.

புப்ரதம நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கா, நீதிபதிகள் பி.ஏ.ரத்நாயக்க, எஸ்.ஐ.இமாம் ஆகியோர் கொண்ட நீதிபதி குழுமம் இவ்வழக்கை கேட்டது. 

மேற்படி தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எம்.பீ.பீ.எஸ் மருத்துவ பட்டம் வழங்கும் தகுதியில்லை எனக்கூறி இந்த மனுவை இரண்டு மருத்துவர்களும் இரண்டு பல்கலைக்கழக ஆசிரியர்களும் தாக்கல் செய்திருந்தனர். 

சைற்றிம் கல்லூரிக்கு மருத்துவத்தில் பட்டம் வழங்கும் அங்கீகாரத்தைக் கொடுத்த ஓகஸ்ட் 30, 2012இல் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனங்கள் கட்டளையை செல்லுபடியற்றதென அறிவிக்க வேண்டுமென மனுதாரர்கள் தமது மனுவி; தெரிவித்திருந்தனர். 

மேலும், இந்த மனுவில் மருத்துவப் பட்டத்தை வழங்கும் பாடநெறியை நடத்துவதற்கு முதலீட்டு சபையின் கீழ் 'சைற்றிம்'க்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி முதலீட்டுச் சபையை பணிக்க வேண்டுமென மனுவில் கோரப்பட்டது.