உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/04/2012

| |

மனைப்பொருளாதாரத்தினை உயர்த்தி அவர்களின் தனிநபர் வருமானங்களை ஊக்குவிப்பதற்கான பல திட்டங்கள் திவிநெகுமவில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அம்மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்குகின்ற ஓர் சட்டமூலம் இதுவல்ல என முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று (02.10.2012) கிழக்கு மாகாண சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட திவிநெகும சட்ட மூலம் தொடர்பிலான விவாதத்தின் போது கருத்து தெரிவிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் தெரிவிக்கையில் இன்று கிழக்கு மாகாண சபையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட திவிநெகும சட்டமூலமானது, முழுக்க முழுக்க அபிவிருத்தி திட்டங்களை மேம்படுத்துவதற்கான ஓர் திட்டமே தவிர, 13ஆவது திருத்தச் சட்டத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீளப்பெறுகின்ற அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவிப்பதைப் பேன்று தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கின்ற ஓர் சட்டமூலம் இதுவல்ல. என அவர் தெரிவித்தார். அதாவது இன்னும் ஆழமாக சொல்லப்போனால் கிராமிய மட்டத்திலான மனைப்பொருளாதாரத்தினை உயர்த்தி அவர்களின் தனிநபர் வருமானங்களை ஊக்குவிப்பதற்கான பல திட்டங்கள் அதிலே உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
மேலும் விசேடமாக சமுhத்தி நலன் ஓம்புகைத் திட்டத்தின் வாயிலாக பயன்பெறுகின்ற சுமார் 27000 பேருக்கு மேலானவர்கள் இதனால் அதிகம் பயனடைகின்றார்கள். அதிலும் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் சமுர்த்தி அதிகார சபையானது திணைக்களமாக மாறுகின்ற பட்சத்தில் சுய கௌரவம் மிக்க ஓர் அரச அலுவலர் போல் அந்த சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்களும் திகழ்வார்கள். இதனால் அவர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு மற்றும் படிகள் மேலதிக கொடுப்பனவுகளும் வழங்குவதற்கு ஏற்பாடாகும்.
எமது எதிர்கட்சிக் காரர்கள் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மஹிந்த அரசாங்கம் என்ன திட்டத்தை கொண்டு வருகின்றதோ அதனை முதலில் எதிர்க்க வேண்டும். அப்படி எதிர்ப்பதுதான் அவர்களது வேலை. மற்றம்படி குறித்த சட்டமூலத்திலே மக்களுக்கு பணனுள்ளதான ஏதாவது விடங்கள் இருக்கின்றனவா? அல்லது மாற்றங்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் ஏதாவது உண்டா? என்றெல்லாம் பார்க்காமல் வெறுமனே எதிர்ப்போம் என்று எதிர்ப்பது இவர்களது தலையாய கடமை. இவர்கள் காலங்காலமாக இதனைத்தான் செய்து வருகின்றார்கள். தொடர்ந்து மக்கள் வழங்கிய ஆணைக்கு பிரதி உபகாரமாக அரசாங்கம் கொண்டு வருகின்ற எந்த விடயங்களையும் எதிர்hப்பதுதான் அவர்களது தலையாய கடமையும்கூட.
என்னைப் பொறுத்தவரை இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குறிப்பிடுவதனைப் போன்று இந்த சட்டமூலத்திலே பாரிய பிரச்சினைகள் எதுவுமே இல்லை. மாறாக அபிவிருத்தி மேம்பாடுகளை செவ்வனே நிறைவேற்றுவதற்காகன நிறவான புதிய ஏற்பாடுகள் மற்றும் முன்மொழிவுகள் அத்தோடு இது முழுக்க முழுக்க அபிவிருத்தி விடயங்கள் சார்ந்ததொன்று. எமது தமிழ் மக்களின் ஏன் சிறுபான்மை மக்களின் உரிமைகளையோ அல்லது அவர்களது அபிலாசைகளையோ இல்லாது செய்யகின்ற எந்த சரத்துக்களும் இதிலில்லை. எனவே இது உண்மையில் ஆதரிக்க வேண்டிய ஓர் சட்டமூலம் என்பது எனது கருத்து என அவர் தனதுரையிலே குறிப்பிட்டார்.