10/06/2012

| |

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு குறித்து விவாதிக்க இந்தியா செல்லும் இலங்கை குழு


கூடங்குளம் அணு உலை விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் விவாதிக்க இலங்கையின் அதிகாரபூர்வ குழு வரும் 12ம் தேதி இந்தியாவுக்கு செல்லும் என்று மின்சாரத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கூடங்குளம் அணு உலையினால் பாதிப்பு ஏற்பட்டால் இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு. இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது இந்தியாதான்.
கூடங்குளம் அணு உலையில் அணுக் கசிவு ஏற்பட்டால் மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளும் பாதிக்கும். இதனால் சர்வதேச அணுசக்தி உடன்படிக்கையின்படி இந்தியா செயல்பட வேண்டும்.
இது தொடர்பாக விவாதிக்க 6 பேர் அடங்கிய குழு ஒன்று இந்தியா செல்கிறது. கூடங்குளம் அணு உலையின் பாதிப்பிலிருந்து இலங்கையைக் காப்பாற்ற தேவையான உதவிகளை இந்தியா வழங்க இந்த பயணத்தின் போது வலியுறுத்தப்படும்.
இது தொடர்பான ஒப்பந்தத்துக்கான மாதிரியை ஏற்கெனவே இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளோம் என்றார் அவர்.