10/27/2012

| |

பாடகி சின்மயி மீது போலீசில் புகார்


இணைய தளத்தில் தவறான கருத்துகளை பரப்பி வருவதாக பாடகி சின்மயி மீது போலீசில் புகார் செய்யப் பட்டுள்ளது. புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை தலைவர் நீலமேகம், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்: சினிமா பின்னணி பாடகி சின்மயி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு குறித்தும், மீனவர்கள் குறித்தும் அவதூறாக வும், சாதிய வன்மத்தோடும் இணைய தளத்தில் எழுதி உள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு வரும் தலைவர்களையும் இழிவுபடுத்தி உள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.