உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/16/2012

| |

கம்போடிய முன்னாள் மன்னர் சிஹனொக் மரணம்

கம்போடியாவின் முன்னாள் மன்னர் நொரொடொம் சிஹனொக் தனது 89 ஆவது வயதில் காலமானார். சீனத் தலைநகர் பீஜிங்கில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று மரணமடைத்தார்.
எனினும் அவர் பல ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிஹனொக்கின் உடல் கம்போடிய அரச மாளிகைக்கு கொண்டுவரப்பட்டு அரச மரியாதையுடன் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1941 ஆம் ஆண்டு கம்போடிய மன்னராக முடி சூடிக்கொண்ட சிஹனொக், 1953 ஆம் ஆண்டு கம்போடியா பிரான்ஸ் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற போராடியவராவார்.
எனினும் 1970களில் தென் கிழக்கு ஆசியாவில் பாதிப்புச் செலுத்திய பனிப்போர் காரணமாக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளத் தவறினார்.
உள்நாட்டில் இருக்கும் வியட்நாம் கொமியுனிஸ கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து அவர் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடினார். பின்னர் 1975ஆம் ஆண்டு பொல்பொட் ஆட்சிக்கு வந்தபோது சிஹனோக் நாட்டுத் தலைவராக பதவி ஏற்ற போதும் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் பொல்பொட் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து சீனாவில் தஞ்சம் புகுந்த அவர் 13 ஆண்டுகள் கழித்து 1993ஆம் ஆண்டு மீண்டும் வியட்னாம் மன்னராக முடிசூடிக்கொண்டார்.