10/20/2012

| |

நித்தியானந்தா நீக்கம்: மதுரை ஆதீனம் அதிரடி

மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவை, அந்தப் பதவியில் இருந்து திடீரென நீக்கியிருக்கிறார் மதுரை ஆதீனகர்த்தர் அருணகிரிநாதர்நித்யானந்தாவுடன் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்

பொதுமக்கள், பக்தர்கள் இந்த நியமனத்தை விரும்பவில்லை. அரசு விரும்பவில்லை. நீதிமன்றமும் விரும்பவில்லை. அவரே ராஜிநாமா செய்ய இருப்பதாக நேற்று சொல்லியிருந்தார். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் வேண்டாம் என்று வழக்கறிஞர் கூறிவிட்டார். அதனால், வேறுவழியின்றி அவரை நீக்கினேன்’’ என்றார் அருணகிரிநாதர்.
நித்தியானந்தாவை நீக்குமாறு அழுத்தங்கள் ஏதாவது வந்ததா என்று கேட்டபோது, அவ்வாறு எந்த அழுத்தமும் வரவில்லை என்றும், தான் சுயமாகத்தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அருணகிரிநாதர் தெரிவித்தார்.
இந்த முடிவு குறித்து நித்தியானந்தாவுக்குத் தெரியும் என்று கூறிய அருணகிரிநாதர், அதுபற்றி நித்தியானந்தா என்ன சொன்னார் என்பதை வெளியிட மறுத்துவிட்டார்.