உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/08/2012

| |

தமிழர்கள் நலனில் உள்ள அக்கறையினாலேயே நான் அமைச்சு பொறுப்புக்களை ஏற்கவில்லை – ஜனாதிபதி ஆலோசகர் சந்திரகாந்தன்.

தமிழ் மக்களின் நலனில் உள்ள அகக்றையினாலேயே நான் எனக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவில்லை என்று, நேற்றைய தினம் சித்தாண்டியில் இடம்பெற்ற  வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது முன்னாள் மதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சந்திரகாந்தன் அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்,
கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சர் பதவி  இறுதவிரை என்கு வழங்கப்பட இருந்தது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசிற்கு முதலமைச்சு மற்றும் இதர பதவிகளையும் தருகிறோம் வந்து இணைந்து கொள்ளுங்கள் என்று அறிக்கை விட்டதனாலேயே முஸ்லிம் காங்கிரஸ் அரசிடம் பேரம்பேசல் மூலம் முஸ்லிம் முதமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டது. அதேவேளை அதில் உள்ள அமைச்சரவையில் பதவி வழங்கப்ட்டபோது நான் எனது தமிழ் மக்களின் நலனுக்காவே அதனைத் துறந்தேன்.
கடந்த கிழக்கு மாகாண சபையில் நான் மதலமைச்சராக இருந்தேன், என்னுடன் சேர்த்து இரண்டு தமிழர்களும் மாகாண சபையில் அமைச்சரவையில் இருந்தார்கள். ஆனால் தற்போது ஏணைய அமைச்சர்கள் யாவரும் முஸ்லிம் மற்றும் சிங்களவாகளாக இருக்கின்றபோது நான் மட்டும் ஒரு அமைச்சராக இருந்துகொண்டு எடுக்கப்படுகின்ற எல்லா முடிவுகளுக்கும் ஆதரவளிக்கவேண்டும். இந்தநிலைமையில் தமிழர்நலனுக்கு பாதிப்பு எற்படுத்க்கூடிய ஒரு சட்டமூலம் கொண்டு வரப்பட்டால் கூட நான் தெரிந்தோ தெரியாமலோ நானும் துணை நிற்பதாக அமையும். எனவேதான் அத்தகைய எமது இனத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கைக்கு துணைநிற்கின்ற சந்தர்ப்பம் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்திலேதான் நான் அமைச்சுப் பதவியை உதறித்தள்ளினேன்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், ஒரு அரசியல்வாதி என்பவன், தனக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரம் சேவை செய்யாது அனைத்து கிழக்கு மாகாண தமிழர்களையும் குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் அணைவரது காணி, அபிவிருத்தி  ஆகிய அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து நான் சேவை செய்வேன். அது தவிர ஆதரவு தந்த சித்தாண்டி, மாவடிவெம்பு, வந்தாறுமூலை மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு முழுமையாக முயற்சிசெய்து தீர்வினைப் பெற்றுத்தருவேன் எனவும் உறுதியளித்தார்.