உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/06/2012

| |

உயர்கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி பூரணமாக பயன்படுத்தப்படுவதில்லை: நந்திமித்ர ஏக்கநாயக்க


உயர்கல்வி அமைச்சுக்கு வருடாந்தம் ஒதுக்கப்படும் நிதியில் பாரிய தொகை பயன்படுத்தப்படுவதில்லை என உயர்கல்விப் பிரதி அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய வரவு – செலவுத் திட்டத்திற்கு மேலாக வேறு வழிகளிலும் நிதி கிடைக்கப்பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கண்டி – மஹாமாயா கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை, இந்த நாட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதிபோன்று பாரிய தொகை வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படுவதில்லை என அமைச்சர் லக்ஷமன் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.