உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/09/2012

| |

மட்டக்களப்பு தனியார் போக்குவரத்து நிலையம் திறந்த வைப்பு

மட்டக்களப்பு மாவட்ட பிரதான தனியார் போக்குவரத்து பஸ் நிலையம் இன்று மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது. இலஙகை போக்குவரத்து சபை பஸ் நிலையத்துக்கு அருகில் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளின் பேரில் சுமார் 41 இலட்சம் ரூபா செலவில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
தனியார் போக்குவரத்து பஸ் நிலையத்தின் முகாமையாளர் யுவன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க,கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் ஆரியவதி கலபதி,பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.