உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/10/2012

| |

மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் புதிய தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி அரச மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சினால் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 
 
நாடளாவிய ரீதியில் உள்ள மொழிப் பிரச்சினையை எதிர்நோக்குவோர் 1956 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது பிரச்சினைகளை தீர்க்க முடியும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
அதற்கமைய எந்தவொரு அரசாங்க திணைக்களங்களிலும் மக்கள் எதிர்நோக்கக் கூடிய மொழிப் பிரச்சினைகளுக்கு இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.