உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/09/2012

| |

பணத்தாள் கொடுக்கல் வாங்கல்களில் கவனம் வேண்டும்; பொலிஸார் எச்சரிக்கை

பணத்தாள் கொடுக்கல் வாங்கல்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
500 ரூபா, 1000 ரூபா, 2000 ரூபா மற்றும் 5000 ரூபா நாணய தாள்கள் போலியாக அச்சிடுவது தொடர்பில் தொடர்ந்தும் கிடைக்கப்பெற்று வரும் முறைப்பாடுகளை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் – பிரதேசத்தில் 1000 ரூபா போலி நாணய தாள்கள் 150 வைத்திருந்த மூன்று இளைஞர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.
இந்த நிலையிலேயே போலி நாணய தாள்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.