உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/12/2012

| |

இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர்சீன எழுத்தாளர் மோயான், 2012ம் ஆண்டின் நோபல் பரிசைப் பெற்றார் என்று ஸ்விடன் இலக்கிய கழகத்தின் நிரந்தர செயலாளர் பீட்டர் இங்லுன்டு 11ம் நாள் நண்பகல் அறிவித்தார்.

வரலாறு மற்றும் சமூகப் பார்வையில், நடைமுறையையும் கற்பனையையும் இணக்கமாக இணைத்து அவரது படைப்பில் கற்பனை உலகத்தை மோயான் உருவாக்கினார். ஸ்விடன் இலக்கியக் கழகம் அன்று வெளியிட்ட செய்தியறிக்கையில் இவ்வாறு தெரிவித்தது.
மோயானின் படைப்புகள், கற்பனையானதாகவும் நகைச்சுவையானதாகவும் உள்ளன. அவர் இலக்கியத்திற்கு நோபல் பரிசுப் பெற்றிருப்பது, சீன இலக்கியங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் என்று இப்பரிசின் மதிப்பீட்டாளர் கோரான் மாம்க்விஸ்ட் தெரிவித்தார்.