உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

10/08/2012

| |

மாபெரும் வரவேற்பு

முன்னாள் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் தற்போதைய கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான  சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு சித்தண்டி மாவடிவேம்பு கிராம மக்கள் என்றுமே வரலாறு காணாத மாபெரும் வரவேற்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட இவ் வரவேற்பு நிகழ்விலே கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், பொருளாhளர் ஆ.தேவராஜா, கட்சின் செயற்குழு உறுப்பினர் அருண், தியாகராஜா மற்றும் சுந்தரலிங்கம் உட்பட மாவடிவேம்பு பிரதேசத்தின் அமைப்பாளர் சி.திருப்பதி, குடும்பி மலைப் பிரதேச அமைப்பாளர் ச.மேகநாதன், சித்தாண்டி வானவில் விளையாட்டுக கழகத்தின் தலைவர் ராஜநாயகம் மற்றும் உறுப்பினர்கள்  மற்றும் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் ஆதரவாளர்கள் ஊர் பெரியார்கள் உட்பட கிராம மக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.