10/16/2012

| |

திவிநெகும திட்டத்தில் எனது மகளையும்,மருமகனையும் உள் வாங்க வேண்டும்- (பொன்.செல்வராசா M.P)

தற்போது திவிநெகும திட்டத்திற்கென பட்டதாரிகளை நியமனம் செய்கின்ற பூர்வாங்க நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருக்கின்ற வேளையில் திடீரென மட்டக்களப்பு மாவட்டசெயலகத்திற்கு சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா (நவம் M.P) தனது மகளையும்,மருமகனையும் கட்டாயம் இந்த திட்டத்திற்குள் உள் வாங்க வேண்டும் என அங்குள்ள குறித்த சில அதிகாரிகளுடன் ஆங்கிலத்தில் உரத்த குரலில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அவ்வாறு உள்வாங்கபடவில்லை எனில் உடன் தான் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் புலம்பியுள்ளார்.

பாருங்கள் மக்களே "திவிநெகும" திட்டத்தை எதிர்கின்ற ஓர் பிரதான கட்சியின் பிரதி தலைவர் தனது குடும்பத்திற்கு மாத்திரம் நன்மை கிடைக்க வேண்டும் என வாதிடுகிறார். இவர்கள் எல்லோருமே "கருங்காலிகள்தான்".
"படிப்பது தேவாரம்,இடிப்பது சிவன் கோவில்" என்ற கதையாகிய வரலாறுதான் உண்மை.