உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/17/2012

| |


2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்கீட்டின் கீழ் அதாவது சமமான பிராந்திய அபிவிருத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் ஏறாவூர் பற்று மயிலம்பாவெளி கிராமத்திலுள்ள வாழ்வாhரத்தில் பின்தங்கிய மற்றும் கணவனை இழந்த பென்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டு உதவி இன்று வழங்கி வைக்கப்பட்டது. இத் திட்டத்தில் மயிலம்பாவெளியில் சுமார் 51குடும்பங்களும் விபுலானந்தபுரத்தில் சுமார் 55 குடும்பங்களுமாக மொத்தம் 106 பயனாளிகள் இனங்காணப்பட்டு இவர்களுக்காக சுமார் 30 இலட்சம் ரூபாய் பணம் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இத் திட்டத்தின் கீழ் இக் கிராமத்தில் ஒரு பல நோக்கு கட்டிடமும் நிர்மாணிக்கப்பட்டு இன்று முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினாலேயே திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் சி. சந்திரகாந்தன் உரையாற்றுகையில்,
எமது மாகாணத்தில் பெரும்பாலான பெண்கள் கணவனை இழந்து குடும்பத்திற்;கு தலைமை வகிப்பவர்களாக வாழ்கின்றார்கள். இவர்களை வாழ்வாதார ரீதியில் வளம் பெறச் செய்வதன் ஊடாகவே குறித்த பிரதேசத்தின் அபிவிருத்தியை நாம் எதிர் பார்க்க முடியும். அந்த வகையில்தான் நான் முதலமைச்சராக இருக்கின்ற போது விசேடமாக இத்திட்டத்தை கிராமங்கள் தோறும் ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டேன். குறித்த இத்திட்டமானது முதற்கட்டமாக குறிப்பிட்ட சில கிராமங்களுக்கே சென்றடைந்தாலும் எதிர் கலத்தில் ஏனைய பல திட்ங்களின் ஊடாக இதனை முழுமை பெறச் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
பெண்கள் அபிவிருத்தியிலே அதிக வகிபங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களினாலும் எமது பிரதேச அபிவிருத்திக்கான பங்களிப்பு இருக்கின்றது என்ற எண்ணம் அவர்களிடத்திலே தோன்றும். அப்போது அவர்கள் இயல்பாக தங்களது சுயவருமானத்தை அதிகரிக்கின்றவர்களாகவும் ஒரு தொழிலாளியாகவும் மாறுவார்கள். இதனூடாக நாம் கடந்த காலங்களில் பொருளாதார ரீதியில் கண்ட பின்னடைவை போக்க முடியும். அத்தோடு இன்று இந்தக் கிராமத்திலே இத் திட்டத்தின் மூலம் பயன் பெற்றோர் ஏனைய கிராமங்களிலுள்ள பெண்களுக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ வேண்டும் மேலும் இத் திட்டத்தின் முழுமையான பலனையும் அவர்கள் அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் தனதுரையில் கேட்டுக் கொண்டார்.
மேலும் இக் கிராமத்தில் வசிக்கின்ற மிகவும் கஸ்டப்பட்ட 10 குடும்பங்களுக்கு 10 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதோடு அவ் வீடுகளை மு;ன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று உத்தியோகபூர்வமாக கையளித்தர்தார்.