உண்மைகள்

மறைக்கப்படும் மறுக்கப்படும் செய்திகளுக்காக...

Get The Latest News

Sign up to receive latest news

11/15/2012

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவரின் 4ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாரசுவாமி நந்தகோபன்(ரகு);அவர்களின் 4ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இன்று இல91,  வாவிக்கரை வீதி, மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சயின் சிரேஸ்ட உறுப்பினர்கள், தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டு அன்னாரின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அனனாரின் சகோதரரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் திருமலை மாவட்ட அமைப்பாளருமான கு.நளினகாந்தன் மற்றும் ஆலோசகர்களில் ஒருவரான துரைநாயகம், முன்னாள் மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கல் பத்மநாதன் உட்பட பல மூத்த உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.