11/27/2012

| |

சிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் - வாசுதேவ

VasuDeva

சிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

பல மொழி அறிவுடன், சகோதர இனங்களுடன் ஐக்கியத்தை ஏற்படுத்தும் பணிகளை பாடசாலைகளில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்பதால், பாடசாலைகளை இனரீதியாக பிரிக்கக் கூடாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு ஒன்றின் இருப்புக்கு நல்லிணக்கம் என்பது முக்கியமானது. மூன்று மொழிகளின் பணியாற்றுவதன் மூலம் இந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். இலங்கையின் பிரதான மொழிகள் சிங்களமும், தமிழுமாகும்.
இந்த இரண்டு மொழிகளை கற்பதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.