11/29/2012

| |

உலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்

நீதி, நியாயம் ஆகியவற்றை நேசிக்கும் உலக மக்கள் வரு டந்தோறும் நவம்பர் 29 ஆம் திகதியை சுதந்திர, சுயாதீனமான நாட்டில் வாழும் உரிமையை இழந்த பாலஸ்தீன மக்கள் மீதான ஒத்து ழைப்பை வெளியிடவும் அந்த வர லாற்றுத் தவறை சரிசெய்யவும் பெரும் எதிர்பார்ப்புடன் நினைவு கூருகின்றனர்.
இருந்தாலும் 64 வருடங்களுக்கும் மேல் கடந்தபோதும் உலக மக்களின் பெயரால் பலம்மிக்க அரசாங்கங்களின் தேவைகளுக்காக செய்யப்பட்ட தவறு திருத்தப்படவில்லை, திருத் தப்படுவதாகவும் தெரியவில்லை.
நீண்ட காலம் கொண்ட பெருமை மிக்க வரலாற்றுக்கு உரிமை கோரும் பாலஸ்தீன மக்களுக்கு நாட்டுக்கும், தேசியத்துக்கும் உள்ள உரிமை 1947 நவம்பர் 29 ஆம் திகதி இழக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பாலஸ்தீன தேசம் யூத நாடாகவும், அரபு நாடாகவும் இரண்டாக ஆக்கு வதற்கு இல 181 (11) பிரேரணைக்கு சார்பாக 33 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளாலும் நிறைவேறியது.
இப்பிரேரணைப்படி பாலஸ்தீன நிலப் பிரதேசத்தில் 55 வீதம் அவ்வேளை அங்கு குடியேறி இருந்த 30 வீத யூதர்களுக்கு சுவீகரிக்கப்பட்டது.
1949 ஆம் ஆண்டாகும் போது யூதர்கள் பாலஸ்தீன் பகுதியில் 77 வீதத்துக்கு மேல் 600,000 க்கும் மேற் பட்ட பாலஸ்தீன மக்களை இருந்த இடங்களில் இருந்து விரட்டி அடித்து கைப்பற்றிக்கொண்டனர்.
1967 யுத்தத்துக்குப் பின்னர் எஞ்சிய நிலப் பரப்பிலிருந்தும் அதிக பகுதியைக் கைப்பற்றிய யூத ராஜ்யம் மக்களை தற்போது பாலஸ்தீன மேற்கு பகுதியின் காஸா பகுதியில் சிறிய பகுதிக்குள் அடைத்து வைத்துள்ளது.
தம்முடைய நிர்வாகத்தின் கீழ் சுதந்திர இணமாக வாழும் உரிமை இழக்கச் செய்யப்பட்ட பாலஸ்தீன் மக்களின் பெரும்பான்மையானோர் அரபு உலகில் ஒவ்வோர் இடங்களி லுள்ள அகதிகள் முகாம்களிலேயே இன்று வாழ்கின்றனர்.
மூன்று தலைமுறையினராக அகதி முகாம்களில் நிர்க்கதியாகி, அவ தூறுகளுக்கும் உள்ளாகி வாழும் இந்த மக்களிடம் தமது நாடு பற்றிய கனவு இன்னும் மறையவில்லை.
தமது நிஜபூமியைக் குறித்து அவர்கள் இன்னும் கனா காண்கின்றனர்.
மிகவும் தீவிரமானோர் ஆயுதங்களால் போராட்டம் நடத்துகின்றனர். முழு மத்திய கிழக்கையும் நிலையற்ற தன்மைக்கு ஆளாக்கியுள்ள இந்தப் பிரச்சினை இன்று உண்மையாகவே நீதிக்கும், நியாயத்துக்குமான மனித வர்க்கத்துக்கு செய்யப்படும் நிந்த னையாகும்.
உலக சக்திகள் திரையின் பின்னால் செய்த நிர்ப்பந்தங்கள் காரணமாக 1947 ல் பாலஸ்தீனத்தை இரண்டாக்கும் பிரேரணை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டதுடன், அதனைத் திருத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
இஸ்ரேலினால் பெயரளவில் பிரகடனம் செய்யப்பட்ட அந்த யூத ராஜ்யம் ஐக்கிய நாடுகள் சபையின் பிரேரணையை கருத்திற் கொள் ளாது பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மீறியதால் பாதுகாப்புச் சபை அவற்றைச் சரிசெய்ய பல பிரேரணைகளை நிறைவேற்றியது.
1948 ஆம் ஆண்டில் மட்டும் பாலஸ்தீன பிரச்சினை தொடர்பாக பாதுகாப்புச் சபை 16 பிரேரணை களைக் கொண்டு அமைந்தது.
2012 ல் மத்திய கிழக்கு நிலைமை தொடர்பாக நிறைவேற்றிய 2064 ஆம் இலக்க பிரேரணையுடன் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் 165 ஆகும்.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் உருவான ஐக்கிய நாடுகள் சங்கம் வேறு எந்த விடயம் தொடர்பாகவும் இத்தனை எண்ணிக்கையில் பிரேரணைகளை நிறைவேற்றி உள்ளதாக நான் கருதவில்லை.
அணுசக்தி பலம் உட்பட மட்டற்ற யுத்தப் பலத்தையும் கட்டி எழுப்பியுள்ள இஸ்ரேல் இந்த யோசனைகளைக் கருத்திற் கொள்ளவில்லை.
இதனை கருத்திற் கொள்ளாததால் உலகின் மற்றைய நாடுகளுக்குப் போன்று இஸ்ரேலுக்கும் எதிராக ஐக்கிய நாடுகளின் தடைகள் பிறப் பிக்கப்படவில்லை.
1947 ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட 181 (11) பிரேரணை கவலைக்குரியது.
இப்பிரேரணையின் பிரகாரம் உருவாக்கப்பட உள்ள அரபு ராஜ்யம் உண்மையிலேயே பாலஸ்தீன நிர்வாகம் தற்போது நடத்தும் ஐக்கிய நாடுகளின் மகா சபைக்கு மேற்கு பகுதியிலும், காஸா பகுதியிலும் மிகச் சிறிய நிலப் பரப்பில் ராஜ்யம் ஒன்றை ஏற்றுக் கொள்ளும் பிரேரணையாகும். ஏற்றுக் கொள்ளும் பிரேரணை இப்பகுதியில் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் சவா லாக அமைவதாகக் கருதி அதனை அகற்றுவதற்கு இஸ்ரேலும் அதற்கு உதவி ஆதரவு நல்கும் மேற்குலக நாடுகளும் முயற்சிக்கின்றன.
பாலஸ்தீன அரசை உருவாக்குவது இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினை இனம்கண்டுள்ள இந்த ராஜ்யங்கள் அதற்கு மாற்றமாகச் செயற்படுவதென் றால் பாலஸ்தீனத்துக்கு எதிராக பலதரப்பட்ட தடைகளை பிறப்பி ப்பதற்கும் தயாராகவே உள்ளது.
பாலஸ்தீன நிர்வாகத்துக்கு யுனெ ஸ்கோ அமைப்பின் அங்கத்துவத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டதோடு பலம்வாய்ந்த நாடுகள் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்படும். நிதிகளை நிறுத்தத் தீர்மானித்தது.
மனிதாபிமானமற்ற நடவடிக்கை களுக்குப் பலியாகி தமது தாயகத்தையும் இழந்துள்ள பாலஸ்தீனர்கள் ஆக்கிரமிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அவர்களிடமிருந்து தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென நிர்ப்பந்திக்கும் மேற்குலக சக்திகளின் நிலைப்பாடானது வெறுக்கத்தக்க ஒன்றாகும்.
தமது நிலைப்பாட்டுக்காக பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக எப்போதும் கூறும் இஸ்ரேல் சமாதானத்துக்கு விருப்பமில்லை என்பதற்கு புதிய உதாரணம்; ஹமாஸ் அமைப்பின் இராணுவத் தலைவரான அஹமட் ஜபாரியின் கொலையாகும்.
பல வருடங்களாக ஹமாஸ் அமைப்பினால் கைது செய்யப் பட்டிருந்த இஸ்ரேல் இராணுவ வீரரான கிலாட் ஹலிட்டை விடுதலை செய்து கொள்வதற்கு தலையீடு செய்த இஸ்ரேலின் சமாதான செயற்பாட்டாளரான கர்ஷோ பென்சின் இஸ்ரேலில் பிரசுரமாகும் 'ஹாரெட்ஸ்' பத்திரிகைக்கு தெரி வித்துள்ளது ஜபாரியின் கொலையானது, இஸ்ரேலுடன் நிலையான யுத்த தவிர்ப்பு ஒப்பந்தத்துக்கான சட்ட வரைவை அவரிடம் கையளித்து சில நிமிட நேரங்களுக்குப் பின்னரேயே நடந்தது.
ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பலிகொள்ளும் குண்டுமாரி பொழிவதன் மற்றுமொரு ஆரம்பமே அதுவாகும்.
இந்த நவம்பர் 29 ஆம் திகதியை பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தின மாக இத்தகைய ஒரு கால கட்டத்திலேயே நாம் நினைவு கூருகிறோம்.
தேசிய அடையாளத்துவம், மானிட கெளரவம் ஆகியவற்றுக்காக பலஸ்தீன மக்கள் உச்ச மட்டத்தில் கொண்டு சென்ற இப் போராட்டம் ஒருமுறை வன்முறையானது.
இருப்பினும் சுதந்திர, ஒழுக்க விழுமியங்களைக் கெளரவம் செய்யும் மனிதர்கள் என்ற வகையில் அதனை பயங்கரவாதம் என்று அகற்றுவது மட்டும் நாம் செய்ய வேண்டியதல்ல.
எந்த வகையிலாவது மனித உயிர்களை போக்குவது பயங்கரவாதமாகும்.
பயங்கரவாதத்துக்கு அவர்கள் செல்லக் காரணமான அநீதியைக் களைய நடவடிக்கை எடுப்பதாகும்.
அநீதி அசாதாரணம் ஆகியவற் றைக் கொண்டுள்ளவர்கள் எவ்வித மான சக்தி கொண்டிருந்த போதும் வெறுக்கப்படுவார்கள்.
மற்றுமொரு தொகுதி மக்களின் வாழும் உரிமையைப் பறித்து, அவர் கள் மீது வன்முறையை மட்டற்ற விதத் தில் கட்டவிழ்த்து விடுவித்துள்ள நிர் வாகிகளையும் நிர்வாக முறைகளையும் நாம் நிராகரிக்க வேண்டும்.
நியாயமான, சாதாரணமான நபர் களாக நாம் அப்போதே ஆகுவோம்.
பாலஸ்தீனம் தொடர்பாக நெல்சன் மண்டேலா கூறிய ஒரு கருத்துடன் இக் குறிப்புரையை நிறைவு செய்யலாமென நினைக்கிறேன்.
'அடிமைத் தனத்திலும், இன ரீதியாகவும் பலியாகியுள்ள பாலஸ் தீன மக்கள் அவற்றில் இருந்து சுதந்திரம் பெறும் வரை, தென் ஆபிரிக்காவில் நாம் பெற்ற சுதந் திரம் முழுமையான சுதந்திரம் ஆக மாட்டாது'